ஓம்வதி தேவி
ஓம்வதி தேவி (Omvati Devi)(பிறப்பு 1949) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் மக்களவைத் தொகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 12வது மக்களவையின் உறுப்பினராக இருந்தார்.[1]
ஓம்வதி தேவி Omvati Devi | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | பிஜ்னோர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1949 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ஆர். கே. சிங் |
முன்னாள் கல்லூரி | ஆர். எஸ். எம். பட்டப்படிப்பு கல்லூரி, தாம்பூர் |
தொழில் | அரசியல்வாதி, சமூகப்பணி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஓம்வதி 1949ஆம் ஆண்டு பிஜ்னோரில் (உத்திரப் பிரதேசம்) உள்ள தகாவாலி கிராமத்தில் பிறந்தார். இவர் சூன் 1959-ல் ஆர். கே. சிங்கைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர்.[1]
கல்வி மற்றும் தொழில்
தொகுஓம்வதி தனது பள்ளிப் படிப்பை தாம்பூர் ஆர். எஸ். எம். பட்டப்படிப்புக் கல்லூரியில் முடித்தார். 1985ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-ல் ஓம்வதி 12வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
- உறுப்பினர், தொழிலாளர் நலக் குழு
- உறுப்பினர், பயனர்கள் குழு, வடக்கு ரயில்வே
- உறுப்பினர், ஆலோசனைக் குழு, இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 26 February 2014."Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". Retrieved 26 February 2014.