ஓரியூர்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்

ஓரியூர் (Oriyur) தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை வட்டத்தைச் சேர்ந்த சிறு கிராமம்[1]. இது தேவகோட்டை நகரத்திலிருந்து 35 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.

ஓரியூர்
கிராமம் - புனித அருளானந்தர் தேவாலயம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
மொழிகள்
 • பேச்சு மொழிதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்623406
அருகே அமைந்த நகரம்தேவகோட்டை

போர்த்துகீசியரான அருளானந்தர் என்ற ஜான் டி பிரிட்டோ 11 பெப்ரவரி 1693இல் உயிர்த்தியாகம் செய்த இடம் ஒரியூர். தண்டனையை நிறைவேற்றுபவர்களை நோக்கி அருள் அருளானந்தர் தன் தலையை மனமுவந்து தந்த வண்ணம் நிற்கும் சிலை, கோதிக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட புனித அருளானந்தர் கிறித்தவ தேவாலய கட்டிடத்தின் முகப்பில் உள்ளது. இந்தத் துறவியின் தலையை வெட்டும்போது தெறித்த ரத்தத்தால், இந்தப் பகுதியில் உள்ள மணற்குன்றுகள் அனைத்தும் சிவப்பாக மாறி விட்டதாகக் கூறப்படுகிறது. இது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக இது திகழ்கிறது.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150418104004/http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=27&centcode=0001&tlkname=Tiruvadanai#MAP. 
  2. The Catholic Encyclopedia
  3. http://tamilnadutourism.org/Tamil/eramanathapuram.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரியூர்&oldid=3547196" இருந்து மீள்விக்கப்பட்டது