ஓரி கோபோ

இசுரேலிய சதுரங்க வீரர்

ஓரி கோபோ (Ori Kobo) இசுரேல் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பிடே அமைப்பால் 2017 ஆம் ஆண்டு இவருக்கு கிராண்டு மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் 2559 எலோபுள்ளிகள் எடுத்திருந்தது இவரது உச்சபட்ச புள்ளிகள் கணக்காகும்.

ஓரி கோபோ
நாடுஇசுரேல்
பிறப்புஏப்ரல் 24, 1997 (1997-04-24) (அகவை 27)
எருசலேம், இசுரேல்
பட்டம்கிரான்டுமாசுட்டர் (2017)[1]
பிடே தரவுகோள்2513 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2559 (மே 2023)

சதுரங்க வாழ்க்கை

தொகு

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உலக அணி வெற்றியாளர் போட்டியில் மாக்சிம் ரோட்சுடீன், தமிர் நபாடி, அவிட்டல் பொருச்சோவ்சுகி, இலியா சுமிரின் மற்றும் எவ்கெனி போசுட்னி ஆகியோருடன் இணைந்து இசுரேலிய சதுரங்க அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.[2]

2022 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் நடைபெற்ற இசுரேலிய சதுரங்க வெற்றியாளர் போட்டியில் ஓரி கோபோ 6 ஆவது இடத்தைப் பிடித்தார்.[3]

2023 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் நடைபெற்ற இசுபோர்ட்லேண்டு என்.ஆர்.டபிள்யூ கோப்பையில் 96-நகர்வு ஆட்டத்தில் அலெக்சாண்டர் டோன்சென்கோவால் ஓரி கோபோ தோற்கடிக்கப்பட்டார்.[4]

2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். முதல் சுற்றில் ஆத்திரிய நாட்டு சதுரங்க வீரர் வாலண்டைன் திராக்னேவை எதிர்த்து விளையாடி தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "FIDE Title Application (GM)" (PDF).
  2. "Despite boycott call, chess teams in Israel for world championship". November 20, 2022.
  3. "Gorshtein and Shvayger win 2022 Israeli Championship". December 14, 2022.
  4. Ahmed, Shahid (July 3, 2023). "Sportland NRW Cup 2023: Karthik Venkataraman second, Sparkassen Open: Leon Luke Mendonca third".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரி_கோபோ&oldid=3858770" இலிருந்து மீள்விக்கப்பட்டது