வாலண்டைன் திராக்னேவு

ஆத்திரிய நாட்டு சதுரங்க வீரர்

வாலண்டைன் திராக்னேவு (Valentin Dragnev) ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 1999 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு இவருக்கு கிராண்டு மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக வாலண்டைன் திராக்னேவு 2014 ஆம் ஆண்டு முதல் பிடேமாசுட்டராகவும் 2016 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு மாசுட்டராகவும் சிறப்பு பெற்றிருந்தார். அவர் தற்போது ஆத்திரியாவில் 2 ஆவது சிறந்த வீரர் என்றும் உலகின் சிறந்த வீரர் தரவரிசையில் 431 ஆவது வீரர் என்றும் அறியப்படுகிறார்.[1] 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2564 எலோபுள்ளிகள் எடுத்திருந்தது இவரது உச்சபட்ச புள்ளிகள் கணக்காகும்.[2] 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆத்திரிய சதுரங்க வெற்றியாளர் போட்டியில் இரண்டாவது இடத்தையும், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இதே போட்டியில் சதுரங்க வெற்றியாளராகவும் திகழ்ந்தார். 42 மற்றும் 43 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் ஆத்திரியா நாட்டை பிரதிநிதிதுவப்படுத்தினார்.[3]

வாலண்டைன் திராக்னேவு
2016 ஆம் ஆண்டில் வாலண்டைன் திராக்னேவு
நாடுஆத்திரியா
பிறப்பு5 மார்ச்சு 1999 (1999-03-05) (அகவை 25)
வியன்னா, ஆத்திரியா
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2018)
பிடே தரவுகோள்2535 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2593 (மே 2023)

2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். முதல் சுற்றில் இசுரேலிய நாட்டு சதுரங்க வீரர் ஓரி கோபோவை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Dragnev, Valentin FIDE Chess Profile - Players Arbiters Trainers". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 21 April 2020.
  2. "Valentin Dragnev chess games and profile". ChessDB.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Valentin Dragnev". tools.wmflabs.org. பார்க்கப்பட்ட நாள் 21 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலண்டைன்_திராக்னேவு&oldid=3857751" இலிருந்து மீள்விக்கப்பட்டது