ஓர விளைவு
ஒன்றுக்கொன்று இயைபில்லாத அல்லது முரண்படுகின்ற சூழல்கள் ஒரு சூழல் மண்டலத்தில் (ecosystem) அருகருகே அமைவதால் ஏற்படும் விளைவே ஓர விளைவு அல்லது விளிம்பு விளைவு (edge effect) எனப்படுகின்றது. இது பொதுவாக, இரண்டு வாழிடங்களுக்கு (habitats) இடையிலான எல்லைத் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு கருத்துரு ஆகும். சிறப்பாகக் காடுகளுக்கும், இயல்பு குலைக்கப்பட்ட அதன் பகுதி அல்லது மேம்படுத்தப்பட்ட நிலப் பகுதிகளுக்கும் இடையிலான எல்லைகள் தொடர்பில் பயன்படுகின்றது. இவ்விளைவு, சிறிய வாழிடத் துண்டுகளில் (habitat fragments) தெளிவாகத் தெரியும். இவ்வாறான இடங்களில் எல்லைகளில் மட்டுமன்றி விளைவுகள் முழுப் பகுதியிலுமே பரந்து காணப்படலாம்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Levin, Simon A. (2009). The Princeton Guide to Ecology. Princeton University Press. p. 780. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691128399.
- ↑ PORENSKY, LAUREN M.; YOUNG, TRUMAN P. (2013-03-26). "Edge‐Effect Interactions in Fragmented and Patchy Landscapes". Conservation Biology 27 (3): 509–519. doi:10.1111/cobi.12042. பன்னாட்டுத் தர தொடர் எண்:0888-8892. பப்மெட்:23531018. http://dx.doi.org/10.1111/cobi.12042. பார்த்த நாள்: 2022-04-01.
- ↑ Holway, David A. (February 2005). "Edge effects of an invasive species across a natural ecological boundary" (in en). Biological Conservation 121 (4): 561–567. doi:10.1016/j.biocon.2004.06.005. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0006320704002423. பார்த்த நாள்: 2022-04-01.