ஓல்மியம்(III) அயோடைடு
ஓல்மியம்(III) அயோடைடு (Holmium(III) iodide) என்பது HoI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியத்தின் அயோடைடு உப்பான இச்சேர்மம் உலோக ஆலைடு விளக்குகளில் உட்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஓல்மியம் அயோடைடு
ஓல்மியம் மூவயோடைடு | |
இனங்காட்டிகள் | |
13813-41-7 | |
EC number | 237-470-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83748 |
| |
பண்புகள் | |
HoI3 | |
தோற்றம் | வெளிர் மஞ்சள் நிறத் திண்மம்[1][2] |
அடர்த்தி | 5.4 கி/செ.மீ3[3] |
உருகுநிலை | 994 °செல்சியசு[2] |
கொதிநிலை | 1300 °செல்சியசு[4] |
தண்ணீரில் கரையும்[2] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஓல்மியம் மற்றும் அயோடின் தனிமங்களை நேரடியாக வினைபுரியச் செய்து ஓல்மியம்(III) அயோடைடு தயாரிக்கப்படுகிறது:[4]
- 2 Ho + 3 I2 → 2 HoI3
ஓல்மியத்துடன் நேரடியாக பாதரச(II) அயோடைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் ஓல்மியம்(III) அயோடைடு உருவாக்கப்படுகிறது.
- 2 Ho + 3 HgI2 → 2 HoI3 + 3 Hg
தயாரிப்பு வினையில் உருவாகும் பாதரசத்தை வடிகட்டுதல் மூலம் அகற்றலாம்.[5]
ஓல்மியம்(III) அயோடைடு நீரேற்றை அதிக அளவு அம்மோனியம் அயோடைடு சேர்த்து வினைபுரியச் செய்து, சேர்மத்தை நீராற்பகுப்புக்கு ஆளாக்கி நீர்நீக்கல் வினையின் மூலம் நீரற்ற வடிவமாக மாற்றலாம்.[4]
பண்புகள்
தொகுஓல்மியம்(III) அயோடைடு அதிகமான அளவுக்கு நீருறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது. இது தண்ணீரில் கரையும். பிசுமத்(III) அயோடைடு சேர்மத்தின் கட்டமைப்பை ஒத்த மஞ்சள் நிற அறுகோணப் படிகங்களாக உருவாகிறது.[6][3][2] It forms yellow hexagonal crystals with a crystal structure similar to bismuth(III) iodide.[4] காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எளிதில் நீரேற்றாக மாற்றமடையும். தொடர்புடைய ஆக்சைடு அயோடைடும் உயர்ந்த வெப்பநிலையில் உடனடியாக உருவாகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jantsch, G.; Jawurek, H.; Skalla, N.; Gawalowski, H. (1932). "Zur Kenntnis der Halogenide der seltenen Erden. VI. Über die Halogenide der Terbin- und Erbinerdengruppe". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 207 (4): 353–367. doi:10.1002/zaac.19322070404.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "13635 Holmium(III) iodide, ultra dry, 99.99% (REO)". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
- ↑ 3.0 3.1 Carl L. Yaws (2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0128011461. பார்க்கப்பட்ட நாள் 2017-08-28.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 1077.
- ↑ Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. (1964). "Preparation and crystal data for lanthanide and actinide triiodides". Inorganic Chemistry 3 (8): 1137–1141. doi:10.1021/ic50018a015. https://digital.library.unt.edu/ark:/67531/metadc867868/.
- ↑ "Holmium triiodide". WebElements. பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.