ஔசா சுல்தானகம்

ஔசா சுல்தானகம் அல்லது அஃபர் சுல்தானகம் (ஆட்சி: 1734-தற்காலம்) எனப்படுவது எத்தியோப்பியாவின் கிழக்கில் அமைந்த அபார் பிரதேசம் மற்றும் எரித்திரியா, ஜிபூத்தி ஆகியவற்றின் எல்லைகளில் அமைந்து ஆட்சி செலுத்திய முடியரசு ஆகும். அஃபர் இனத்தினரின் முதன்மையான முடியரசாக ஔசா சுல்தானகம் விளங்கியது. இவ்வரசின் அதிகாரத்தை ஏனைய அஃபர் ஆட்சியாளர்கள் மேலேற்றிருந்தனர்.

அஃபர் சுல்தானகம்
ஔசா சுல்தானகம்
1734–தற்காலம்
கொடி of ஔசா சுல்தானகம்
கொடி
தலைநகரம்ஔசா
பேசப்படும் மொழிகள்அஃபர், அரபு
சமயம்
இஸ்லாம்
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான் 
• 1734–1749
கிதாஃபு
• 2011-தற்காலம்
ஹன்பளி அலிமீரா
வரலாறு 
• தொடக்கம்
1734
• முடிவு
தற்காலம்

வரலாறு

தொகு

மரபு வழியாகவே அஃபர் இனத்தினர் பல்வேறு சுதந்திரமான அரசுகளாகப் பிரிந்திருந்தனர். அவர்களில் ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு சுல்தான் இருந்தார்.[1]

 
1880 அளவில் அஃபர் சுல்தானகத்தின் அமைவைக் காட்டும் வரைபடம்

ஔசா சுல்தானகமானது அதற்கு முன்னிருந்த ஔசா இமாமகத்தின் தொடர்ச்சியாகும். அதற்கு முன்னர் இப்பகுதியில் ஆட்சி செய்த அதல் சுல்தானகமானது 1577 இல் அஃபர், ஔசா நகர அரசுகளாகப் பிளவுற்ற போது ஔசா அரசின் இமாம் முகம்மது ஜசா தன் தலைநகரை ஹரார் நகரிலிருந்து ஔசா நகருக்கு மாற்றினார். 1672 ஆம் ஆண்டு இமாம் உமருத்தீன் இப்னு ஆதம் என்பவர் அரியணையேறியதுடன் அவ்வரசு வீழ்ச்சியுற்றது.[2] அதனைத் தொடர்ந்து, 1734 இல் கிதாஃபு என்பவரால் ஔசா சுல்தானகம் மீள்நிறுவப்பட்ட பின்னர் அவருத முதைத்தோ அரச மரபு இதனை ஆளத் தொடங்கியது.[3] ஔசா சுல்தானின் முதன்மையான சின்னமான கைக்கோல் மந்திர வலிமை கொண்டதாகக் கருதப்பட்டது.[4]

1875 இல் எத்தியோப்பியாவின் மீது எகிப்தியப் படையை வழிநடத்திய வேர்னர் முன்சிங்கர் என்பவரால் இதன் சுல்தான் முகம்மது இப்னு ஹன்ஃபளி தோற்கடிக்கப்பட்டார்.[5] 1865 இல், புதிதாக ஒன்றுபடுத்தப்பட்ட இத்தாலி அரசு ஔசாவின் அப்போதைய சுல்தான் முகம்மதிடம் இருந்து அசபு எனப்பட்ட பகுதியை விலைக்கு வாங்கியதுடன் சுல்தானுடன் பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது. அந்த அசபு பகுதியே பிற்காலத்தில் 1890 ஆம் ஆண்டு எரித்திரியா என்ற பெயரில் இத்தாலிய முடிக்குரிய ஆட்சிப் பகுதியானது. மேற்படி ஒப்பந்தங்களின் விளைவாக, முதலாவது இத்தாலிய-அபிசீனியப் போர் நிகழ்ந்த வேளை "ஔசாவின் சுல்தான் இத்தாலிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில்" எத்தியோப்பியப் பேரரசர் இரண்டாம் மெனெலிக்கு என்பவர் ஔசாவுக்கு அருகில் ஒரு நிலையான படைத்தளத்தை நிறுவினார்.[6]

இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர் நடைபெற்ற போது சுல்தான் முகம்மது யையோ இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஒப்புக்கொண்டார்.[7] அதன் விளைவாக, 1943 இல் மீள்நிறுவப்பட்ட எத்தியோப்பிய அரசு படையனுப்பி சுல்தான் முகம்மதைக் கைது செய்ததுடன் அவரது உறவினருள் ஒருவரைச் சுல்தானாகப் பதவியில் அமர்த்தியது.[8]

ஏப்ரல் 2011 இல் தான் இறக்கும் வரையிலும் அஃபர் இனத்தினரின் சுல்தானாக இருந்தவர் அலிமீரா ஹன்ஃபிரி என்பவராவார். 1975 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் இராணுவ ஆட்சியாளர்களால் அவர் சவூதி அரேபியாவுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த போதிலும், 1991 இல் தெர்கு அரசு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் திரும்பி வந்தார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Matt Phillips, Jean-Bernard Carillet, Lonely Planet Ethiopia and Eritrea, (Lonely Planet: 2006), p.301.
  2. Abir, p. 23 n.1.
  3. Abir, pp. 23-26.
  4. Trimingham, p. 262.
  5. Edward Ullendorff, The Ethiopians: An Introduction to Country and People, second edition (London: Oxford University Press, 1965), p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-285061-X.
  6. Chris Proutky, Empress Taytu and Menilek II (Trenton: The Red Sea Press, 1986), p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-932415-11-3.
  7. Anthony Mockler, Haile Selassie's War (Brooklyn: Olive Branch Press, 2003), p. 111.
  8. Trimingham, p. 172.

உசாத்துணை

தொகு
  • Mordechai Abir, The era of the princes: the challenge of Islam and the re-unification of the Christian empire, 1769-1855 (London: Longmans, 1968).
  • J. Spencer Trimingham, Islam in Ethiopia (Oxford: Geoffrey Cumberlege for the University Press, 1952).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔசா_சுல்தானகம்&oldid=3877030" இலிருந்து மீள்விக்கப்பட்டது