ககுட்சூசி
ககுட்சூசி, カグツチ (ஒளிரும் ஆற்றல், Kagu-tsuchi?), என்பவர் யப்பானியத் தொன்மவியலின்படி நெருப்பின் கமி (தெய்வம்) ஆவார். இவரை இனோககுட்சூசி அல்லது ஓ-மசுபி எனவும் அழைப்பர்.
புராணக்கதை
தொகுககு-ட்சூசியின் பிறப்பு அவரது தாய் இசநாமியை எரிந்து உயிரிழக்கச்செய்தது. இதனால் மிகுந்த கவலையுற்ற அவரது தந்தை இசநாகி ககு-ட்சூசியின் தலையைக் கொய்து, அவரது உடலை தன் வாளால் எட்டு துண்டுகளாக வெட்டினார்.[1] அந்த எட்டு துண்டுகளும் எட்டு எரிமலைகளாக உருமாற்றம் பெற்றன. இசநாகியின் வாளில் இருந்து வடிந்த ரத்தத்திலிருந்து எட்டு கமிக்கள் தோன்றின.
யப்பானியத் தொன்மவியலின்படி ககு-ட்சூசியின் பிறப்பு உலக உருவாக்கத்தின் இறுதியில் நிகழ்ந்து இறப்பின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.[2] இசநாமியை அடுத்து ககுட்சுசியும் யொமிக்கு (பாதாள உலகம்) சென்றடைந்தார். எங்கிசிகி என்ற நூலில், இசநாமி மரண வேதனையில் இருக்கும் போது நீரின் கமியான மிசூவமெவை பெற்றெடுத்து, ககு-ட்ஸுசி ஆத்திரமுற்றால் அவரை அமைதிப்படுத்துப்படி பணிக்கிறார்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Pantheon.org இல் ககு-ட்ஸுசி
- ↑ Ashkenazy, Michael. Handbook of Japanese Mythology. Santa Barbara, California: ABC-Clio, 2003. 186
உசாத்துணைகள்
தொகு- Ashkenazy, Michael. Handbook of Japanese Mythology. Santa Barbara, California: ABC-Clio, 2003.
- Bock, Felicia G., trans. Engi-shiki: Procedures of the Engi Era. ASU Center for Asian Studies (Occasional Paper #17).