கங்கா சாகர் விரைவு வண்டி
கங்கா சாகர் விரைவு வண்டி (Ganga Sagar Express) என்பது இந்திய இரயில்வேயால் இயக்கப்படும் சாதாரண அஞ்சல் / விரைவு தொடர் வண்டியாகும். இது பீகார் மாநிலத்தில் ஜெயின்கருடன் கொல்கத்தாவை இணைக்கிறது. இது 624 கிலோமீட்டர்கள் தொலைவு பயணிக்கிறது. இதன் சராசரி வேகம் மணிக்கு 43 கி.மீ. ஆகும். இந்தத் தொடருந்தானது பொது, இரண்டு அடுக்கு குளிர் சாதன பெட்டி, மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டி, மற்றும் படுக்கை வகுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பொது வகுப்புகள் தவிர அனைத்து இடங்களுக்கும் முன்பதிவு தேவைப்படுகிறது. தட்கல் திட்டமும் உள்ளது.
இந்த வண்டி தினமும் சியால்தா தொடருந்து நிலையத்தில் இருந்து 17:45 மணிக்குப் புறப்படுகிறது. ஜெயநகருக்கு மறுநாள் 08:40 மணிக்கு வந்தடைகிறது. ஜெயநகரிலிருந்து 16:35 மணிக்குப் புறப்பட்டு, சியால்தாலுக்கு மறுநாள் 06:55 மணிக்கு வந்தடைகிறது.[1]
நிற்குமிடங்கள்
தொகு- சியால்தா
- நெய்தி
- பந்தல்
- பர்தமன்
- துர்காபூர்
- ராணிகஞ்ச் ஒரே ஒரு திசையில் மட்டும்
- ஆசான்சோல்
- சித்ராஜன்
- மதுபூர்
- ஜாசித்
- ஜாஜா
- பரவுனி
- தல்சிங்காஸ்ரை
- சமஸ்திபூர்
- ஹயாகாட்
- லஹீராஸ்ராய்
- தர்பங்கா
- சக்ரி
- மதுபாணி
- ஜெய்நகர்
சான்றுகள்
தொகு- ↑ Ganga Sagar timetable, India Rail information