கங்கா (திரைப்படம்)

கர்ணன் இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கங்கா (Ganga) 1972 இல் எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். மேற்கத்திய திரைப்படங்களைத் தழுவிய இப்படத்தில் ஜெய்சங்கர் ராஜ்கோகிலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1972 சனவரி 15 அன்று வெளியிடப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

கங்கா
இயக்கம்கர்ணன்
தயாரிப்புகர்ணன்
இந்திராணி பிலிம்சு
கதைமகேந்திரன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ராஜ கோகிலா
வெளியீடுசனவரி 15, 1972
ஓட்டம்.
நீளம்4124 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இந்திராணி பிலிம்சு தயாரித்த கங்கா திரைப்படத்தை எம். கர்ணன் இயக்கினார். கதையை மகேந்திரன் எழுதியுள்ளார். உரையாடலை மா. ரா எழுதியுள்ளார். படத்தொகுப்பை ஜி. கல்யாணசுந்தரம் மேற்கொண்டார்.

பாடல்கள்

தொகு

இரட்டையர்கள் சங்கர்-கணேஷ் இசையமைத்த இப்படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]

பாடல்கள்
# பாடல்பாடகர் நீளம்
1. "ஆகட்டும் பார்க்கலாம்"  எல். ஆர். ஈஸ்வரி  
2. "ஆணா பெண்ணா சரித்திரம்"  எல். ஆர். ஈஸ்வரி  

வெளியீடும் வரவேற்பும்

தொகு

கங்கா திரைப்படம் 1972 சனவரி 15 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மேற்கத்திய திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.[4][5][6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. Pillai 2015, ப. 178.
  2. 2.0 2.1 Pillai 2015, ப. 172.
  3. "Ganga". Tamil Songs Lyrics. Archived from the original on 10 சூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2023.
  4. Mahendran 2013, ப. 344.
  5. "Irumbu Kottai Murattu Singam". Sify. 7 மே 2010. Archived from the original on 8 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2019.
  6. சனா (8 மே 2020). "கெளபாய் படமும், லாரன்ஸ் மாஸ்டரும் பின்னே அந்தக் குதிரையும்! - இயக்குநர் சிம்புதேவன்". ஆனந்த விகடன். Archived from the original on 10 சூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2023.
  7. சிவகுமார் (2 ஏப்பிரல் 2021). "திரைப்படச்சோலை 19: ஜெய்சங்கர்". இந்து தமிழ் திசை. Archived from the original on 10 சூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_(திரைப்படம்)&oldid=3990786" இலிருந்து மீள்விக்கப்பட்டது