கங்குலா கமலாகர்
கங்குலா கமலாகர் (Gangula Kamalakar) (பிறப்பு 8 மே 1968) தெலுங்கானா மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன், உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சராகப் பணியாற்றும் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரத் இராட்டிர சமிதி சார்பில் தெலங்காணா சட்டப் பேரவைக்கு கரீம்நகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
கங்குலா கமலாகர் | |
---|---|
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன், உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 செப்டம்பர் 2019 | |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
தொகுதி | கரீம்நகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 மே 1968 கரீம்நகர், ஆந்திரப் பிரதேசம், India |
அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி (2013–தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | தெலுங்கு தேசம் கட்சி (2009–2013) |
துணைவர் | ராஜிதா |
பிள்ளைகள் | 2 |
கல்வி | குடிசார் பொறியியல் பிரிவில் தொழில்நுட்பவியல் இளையர் |
வேலை | அரசியல்வாதி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகமலாகர், 1968 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி இன்றைய தெலங்காணாவில் (அப்போது ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு பகுதி) கரீம்நகரில் மல்லையா மற்றும் லட்சுமி நரசம்மாவுக்கு மகனாகப் பிறந்தார். குடிசார் பொறியியல் பிரிவில் தொழில்நுட்பவியல் இளையர் பட்டம் பெற்றார். இவருக்கு ராஜிதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். [1]
தொழில்
தொகுகமலாகர், தனது அரசியல் வாழ்க்கையை 2000 ஆம் ஆண்டு கரீம்நகர் நகராட்சியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ல், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கரீம்நகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பிராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 இல், இவர்தெலங்காணா இயக்கத்தின் தொடக்கத்தில் பாரத் இராட்டிர சமிதியில் சேர்ந்தார். 2014 மற்றும் 2018 தேர்தல்களில் அதே தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] கரீம்நகர் பாரம்பரியமாக வெலமா சாதியினரின் கோட்டையாகக் கருதப்பட்டது. இருப்பினும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கமலாகர், தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3]
செப்டம்பர் 2019 இல், கமலாகர் க. சந்திரசேகர் ராவ் அமைச்சகத்தில் சேர்க்கப்பட்டார். இவருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் நலன், உணவு & குடிமைப் பொருட்கள் & நுகர்வோர் விவகாரங்களுக்கான துறை ஒதுக்கப்பட்டது. [4] [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Member's Profile: SRI GANGULA KAMALAKAR". பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
- ↑ 2.0 2.1 "వెలమల కోటలో ఎమ్మెల్యేగా హ్యాట్రిక్". 2019-09-09. Archived from the original on 2019-09-09. பார்க்கப்பட்ட நாள் 2023-11-03.
- ↑ "Meteoric rise of Gangula Kamalakar". 2019-09-09.
- ↑ "Here is the list of New Telangana Ministers and their portfolios".
- ↑ "KCR expands his 12-member cabinet by inducting 6 ministers into Telangana cabinet".