கசவு
கசவு (Kasavu) என்பது ஒரு மென்மையான, வெள்ளை நிற, கைத்தறி பருத்தி துணியாகும். இது தென்னிந்திய மாநிலம் கேரளாவை பூர்விகமாக கொண்டது.
தோற்றம்
தொகுஅசல் கசவு துணி பருத்தி நூலில் இருந்து கையால் நெசவு செய்யபடுகிறது. இதன் சரிகை தங்க இழைகளால் செய்யப்படுகிறது . பௌத்த சகாப்தத்திற்கு முந்தையது எனவும் நம்பப்படுகிறது [1] மேலும் கேரள மாநிலத்தவர்களான மலையாளிகளால் அணியப்படுகிறது. பண்டிகைகளின்போதும் , நடனங்கள், மற்றும் திருமணங்களின் போதும் ஆண்கள், பெண்கள் இருவராலும் அணியப்படுகிறது. விஷு பண்டிகையின் போது, விஷுக்கனி (விளக்கு) அருகே செல்வம் மற்றும் செழிப்புக்கான அடையாளமாக புத்தம் புதிய கசவு துணியை வைப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகின்றது . மோகினியாட்டம் போன்ற நடன நிகழ்ச்சிகளின் போது, பங்கேற்பாளர்கள் மட்டுமே கசவு ஆடைகளை அணிவார்கள். கைகொட்டிகளி அல்லது திருவாதிரகாளி [2] போன்ற நடனங்களில் பெண் கலைஞர்கள் கசவு புடவை மற்றும் பாரம்பரிய சிவப்பு ரவிக்கைகளை அணிந்து கொள்கின்றனர்.
இடம்
தொகுமுதலில் கேரளாவில் இருந்து வந்தாலும், காலப்போக்கில் கசவு இந்தியா முழுவதும் பரவியுள்ளது, குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா வரை பரவியது. கேரளாவில் முழுக்க முழுக்க கசவு துணி தயாரிப்பதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட கிராமங்கள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது திருச்சூருக்கும் பாலக்காடுக்கும் இடையில் அமைந்துள்ள ஒட்டப்பாலம் அருகே உள்ள குத்தாம்புள்ளி கிராமம் ஆகும். குத்தாம்புள்ளியில் உள்ள தேவாங்க செட்டியார் சமூக நெசவாளர்கள் 500 ஆண்டுகளுக்கு முன் கொச்சின் மகாராஜாவால் கர்நாடகாவில் இருந்து அழைத்து வரப்பட்டனர். [3] முழு கிராம மக்களும் கசவு துணியை உருவாக்கி, தங்கள் பொருட்களை ஒன்றாக சேகரித்து, ஒரு மையப்படுத்தப்பட்ட, கூட்டு சந்தை மூலம் விற்கிறார்கள்.
நவீன கசவு
தொகுபாரம்பரிய முண்டு-வேஷ்டி [4] காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியடைந்தது . பெண்கள் அசல் இரண்டு துண்டு ஆடையை விட ஒற்றை துண்டு சேலையை அணிய விரும்புகிறார்கள். மேலும், அசல் ஆடைகள் தூய தங்க சரிகைகளை கொண்டிருகின்றது, அதேசமயம் புதிய பதிப்புகளில் தங்கத்துடன் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு போன்ற நிறங்கள் உள்ளன, அவை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கின்றது . விசைத்தறிகள் , கைத்தறிகளுக்குப் பதிலாக இயந்திரத்தால் செய்யப்பட்ட துணியானது அசலில் இருந்து வேறுபடுகிறது, இருப்பினும் அவை மொத்த அளவில் உற்பத்தி செய்வதற்கு மலிவானவை.
குறிப்பு
தொகு- ↑ https://www.hindustantimes.com/fashion-and-trends/happy-onam-2020-all-you-need-to-know-about-the-simple-classy-kerala-kasavu-saree/story-K9845TLTJy92nzFG16y0aJ.html
- ↑ "Kaikotti Kali,Thiruvathirakali,Folk Dance,Kaikotti kali Dance of Kerala". www.onamfestival.org. பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
- ↑ "For 500 years, a Kannadiga community of weavers has produced Kerala’s iconic white and gold saree". https://scroll.in/magazine/881619/for-500-years-a-kannadiga-community-of-weavers-has-produced-keralas-iconic-white-and-gold-saree. பார்த்த நாள்: 1 July 2021.
- ↑ "Kerala Kasavu". external. Archived from the original on 2021-04-11. பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.