கச்சநத்தம்

கச்சநத்தம், இந்தியாவின் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், சுள்ளாங்குடி கிராம ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இக்கிராமம் திருப்பாச்சேத்தி அருகே அமைந்துள்ளது. கச்சநத்தம் மானாமதுரையிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் கனிசமான வாழ்கின்றனர்.

இக்கிராமம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்ககை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 630610. அருகமைந்த தொடருந்து நிலையம் மற்றும் அஞ்சலகம் திருப்பாச்சேத்தி ஆகும்.

கச்சநத்தம் படுகொலைகள் தொகு

கச்சநத்தம் கிராமத்தில் 28 மே 2018 அன்று கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பிணக்குகள் தொடர்பான மோதலில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களான ஆறுமுகம், சண்முகநாதன் மற்றும் சந்திரசேகர் ஆகிய 3 மூவரை மற்றொரு தரப்பினர் வெட்டிக் கொலை செய்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இக்கொலை வழக்கை சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்து, குற்றவாளிகள் 27 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி 5 ஆகஸ்டு 2022 அன்று தீர்ப்பு அளித்தது.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சநத்தம்&oldid=3489529" இலிருந்து மீள்விக்கப்பட்டது