கஜனூர்
இந்தியாவில் உள்ள கிராமம்
கஜனூர் அல்லது தொட்டக்கஜனூர் (Gajanur) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றியம், தாளவாடி ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும்.[1]சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், தமிழ்நாடு - கர்நாடகா எல்லையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கஜனூர், தாளவாடிக்கு தெற்கே 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமம் சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் அருகில் அமைந்துள்ளது.
கஜனூர் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°45′58″N 77°00′20″E / 11.76607°N 77.00568°E | |
இந்தியா | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | தாளவாடி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
• பிற | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 638461 |
கஜனூர் கிராமம் கனனடத் திரைப்பட நடிகர் மறைந்த ராஜ்குமாரின் பிறந்த ஊராகும்.[2]இக்கிராமத்திலுள்ள மாளிகையிலிருந்து வீரப்பன், ராஜ்குமாரை 30 சூலை 2000 அன்று கடத்திச் சென்று, 108 நாட்களுக்குப் பிறகு விடுவித்தார்.[3] [4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Verdict in Rajkumar abduction case on Sept. 25". பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.
- ↑ "When power star Puneeth visited Dr. Rajkumar's birthplace for a shoot". பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.
- ↑ நடிகர் ராஜ்குமார் கடத்தல்
- ↑ "Gajanur villagers say lack of political will led to acquittal". பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.
- ↑ "Rajkumar kidnap, state intel had warned him a year before". பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.