கஜாக்கி அணை

கஜாக்கி அணை, ஆப்கானிஸ்தானின் எல்மாந்து மாகாணத்திலுள்ள நீர் மின் ஆற்றல் அணையாகும். இது எல்மாந்து ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கந்தகாரில் இருந்து 100 மைல் (161 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. இது நீர்ப்பாசனத்திற்கும், மின்னாற்றலுக்கும் பயன்படுகிறது. இதன் மூலம் 650,000 ஏக்கர் பரப்பளவிலான நிலத்துக்கு நீர் கிடைக்கிறது. இது 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.[2]

கஜாக்கி அணை
Kajaki Dam
கஜாக்கி அணையை மேலிருந்து எடுத்த படம்
நாடுஆப்கானித்தான்
அமைவிடம்கஜக்கி மாவட்டம், எழ்மாந்து மாகாணம்
நோக்கம்நீர்ப்பாசனம், மின்சாரம்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
கட்டத் தொடங்கியது1951
திறந்தது1953
உரிமையாளர்(கள்)நீருக்கும் ஆற்றலுக்குமான துறை, ஆப்கானிஸ்தான் அரசு
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுஎல்மாந்து ஆறு
உயரம்100 m (328 அடி)
நீளம்270 m (886 அடி)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு1,715,000,000 m3 (1,390,373 acre⋅ft)
செயலில் உள்ள கொள் அளவு1,134,000,000 m3 (919,349 acre⋅ft)
மின் நிலையம்
இயக்குனர்(கள்)எல்மாந்து மற்றும் ஆர்கந்தாப் பள்ளத்தாக்கு ஆணையம்
பணியமர்த்தம்1975
சுழலிகள்2 x 16.5 மெகாவாட்[1]
நிறுவப்பட்ட திறன்33 MW

100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணை 270 மீட்டர் நீளமுடையது. இது சிஸ்தன் பகுதிக்கு செல்லும் நீரை கட்டுப்படுத்துகிறது.

வரலாறு

தொகு

இந்த அணைக்கான கட்டிடப் பணிகள் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1953ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.[3]

1975, 16.5 மெகாவாட் திறன் கொண்ட இரு நிலையங்கள் அணையோரத்தில் நிறுவப்பட்டன.[3]

 
2012இல் எடுக்கப்பட்ட படம்

2001ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை தாக்கிய ஐக்கிய அமெரிக்க வான்படை இந்த அணையையில் உள்ள மின் சேகரிப்பு நிலையத்தையும் குறிவைத்தது.[4]

உலக வங்கியிடமும் பிறரிடமும் இருந்து பெற்ற பணத்தில் இரண்டு மின் நிலையங்களும் மறுசீரமைக்கப்பட்டன. தற்போது 33 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளன.[5] செப்டம்பர் 2005 முதல் முதல் நிலையமும், அக்டோபர் 2009 முதல் அடுத்த மின்நிலையமும் இயங்கத் தொடங்கின.[6]

இங்கு 2007 பிப்பிரவரி மாதத்தில் நேட்டோவுக்கும், தாலிபானுக்கும் இடையில் சண்டை நடைபெற்றது.[7] தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்தோர் இந்த அணையை சீர்குலைக்க முயன்றனர்[8]

 
கஜாக்கி மின்நிலையம்

2008 ஆகஸ்டு மாத இறுதியில், கந்தகாரில் இருந்து மூன்றாவது டர்பைன் கொண்டுவரப்பட்டது. இதற்கு பிரித்தானிய அரசு முன்னின்று உதவியது[9] ஏழு ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும், இன்னும் அது நிறுவப்படவில்லை. இதற்கு 700 டன் சிமெண்ட் தேவைப்படும்.[10]

இதைப் பற்றி பிபிபி ஓர் அறிக்கையை வெளியிட்டது.[11] புதிய டர்பைனும் இயங்கத் தொடங்கினால் மொத்தமாக 51 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.[12]

நீர் வழங்கல் ஒப்பந்தம்

தொகு

1972ஆம் ஆண்டில் ஈரானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, 910 cubic feet per second (26 m3/s) அளவு நீரையாவது தருவதாக ஆப்கானிஸ்தான் ஒப்புக்கொண்டது. 1998ஆம் ஆண்டில், நீரை ஈரானுக்கு அனுப்பாமல் தாலிபான்கள் தடைசெய்து, நீரை வேறுபக்கமாக திருபிவிட்டனர். இதனல் ஹெல்மண்டு பள்ளத்தாக்கு வற்றியது. பல உயிரினங்கள் நீராதாரம் இன்றி மடிந்தன,[13]

 
ஹாமூன் ஏரி

சான்றுகள்

தொகு
  1. "Hydroelectric Power Plants in Afghanistan". IndustCards. Archived from the original on 6 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Boone, Jon (13 December 2009). "Taliban stalls key hydroelectric turbine project in Afghanistan". The Guardian. http://www.guardian.co.uk/world/2009/dec/13/afghanistan-turbine-taliban-british-army. பார்த்த நாள்: 14 December 2009. 
  3. 3.0 3.1 "Kajakai Hydroelectric Project Condition Assessment Dam Safety Assessment Repor" (PDF). Amherst, New York: Acres International Corporation. April 2004. Archived from the original (PDF) on 8 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 7 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Kajakai list as October 31, 2002 aerial bombing location". Archived from the original on நவம்பர் 10, 2016. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10, 2015.
  5. "Afghanistan: Infrastructure". USAID. July 2007 இம் மூலத்தில் இருந்து 2008-10-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081008010048/http://www.usaid.gov/locations/asia_near_east/documents/countries/afghanistan/afgh_infrastructure_jul2007.pdf. பார்த்த நாள்: 2008-10-07. 
  6. "Kajakai Dam Powerhouse Boosts Power to 33 MW, Benefitting Thousands in SW Afghanistan". Afghanistan IRP (Louis Berger Group, Inc.). 24 October 2009. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Taliban flee battle using children as shields - NATO, February 14, 2007
  8. Hundreds of Taliban massing to attack dam - official
  9. "British Troops Complete Operation to Deliver Turbine". Archived from the original on 2008-09-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  10. The Guardian *with Additional reporting by Rauf Mehrpoor (2015-09-18). "British engineers evacuated from key Afghan dam as Taliban approach". The Guardian. http://www.theguardian.com/world/2015/sep/18/british-engineers-evacuated-key-afghan-dam-taliban-approach-kajaki. பார்த்த நாள்: 2015-09-18. 
  11. "What went wrong with Afghanistan Kajaki power project?". BBC News report by Mark Urban. http://www.bbc.co.uk/news/13925886. பார்த்த நாள்: 2011-06-28. 
  12. UK Troops in Huge Turbine Mission
  13. Hirmand River's water to flow into Iran again, soon: Afghan source பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம், December 12, 2002

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கஜாக்கி அணை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜாக்கி_அணை&oldid=3814748" இலிருந்து மீள்விக்கப்பட்டது