கடச்சிரா அருள்மிகு திருக்கபாலம் சிவன் கோவில்

கடச்சிரா திருக்கபாலம் சிவன் கோவில், இந்தியாவின் கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் பெரளசேரியில், அஞ்சரகண்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும்.

கடச்சிரா அருள்மிகு திருக்கபாலம் சிவன் கோவில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:கண்ணூர்
அமைவு:பேரளசேரி, கடச்சிரா
ஆள்கூறுகள்:11°49′33″N 75°27′40″E / 11.8258205°N 75.4611646°E / 11.8258205; 75.4611646
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாணி
கடச்சிரா அருள்மிகு திருக்கபாலம் சிவன் கோவில்

கோவில்

தொகு

இது ஒரு பழமையான இந்து சமயக் கோவிலாகும். இந்த ஆலயம் தட்சிணாமூர்த்தியின் உறைவிடம் ஆகும். சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படும் தட்சிணாமூர்த்தி அனைத்து வகையான அறிவுக்கும் குரு ஆவார்.[1] [2] இக்கோவிலில், ஒன்றுக்கொன்று அருகருகே, இரண்டு கிழக்கு நோக்கிய சன்னதிகள் உள்ளன. கோவிலின் தென்புறமுள்ள சன்னதியில் அருள்மிகு திருக்கபாலேச்வரர் (சிவன்) குடிகொண்டுள்ளார். வடபுறம் உள்ள சன்னதியில் சிவபெருமான் யோகவடிவில் காட்சி தருகிறார்.

வரலாறு

தொகு

நாட்டுப்புறக் கதைகளின்படி, பரசுராம முனிவர் இச்சிலையை நிறுவியதாகக் கருதப்படுகிறது. கேரளாவில் உள்ள 108 புகழ்பெற்ற சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று.[3] [4] 108 சிவாலயங்களுள் குறிப்பிடப்படும் மூன்று திருக்கபாலீஸ்வரம் கோவில்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு சிவன் கோவில்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நிரணம் (நிரணம் திருக்கபாலீஸ்வரம் தட்சிணாமூர்த்தி கோவில்) மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தில் நாதாபுரம் (நாதபுரம் இரிங்கன்னூர் சிவன் கோவில்) ஆகியனவாகும். [5]

அமைவிடம்

தொகு

கண்ணூர் - கூத்துபரம்பா மாநில நெடுஞ்சாலையில், பேரளச்சேரி சந்திப்புக்கு அருகில் உள்ள கடச்சிராவில் இக்கோவில் அமைந்துள்ளது.

மேலும் காண்க

தொகு

கோவில் புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Thrikkapaleswaram - Siva Temple". www.shaivam.org.
  2. Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna Dallapiccola
  3. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama - 47. Trukkapaleeswaram Mahadeva Temple Peralassery". www.vaikhari.org.
  4. "List of 108 Siva Temples in Kerala". www.thekeralatemples.com.
  5. "108 Shiva temples of Kerala - Worshiped by Parasurama Information 46. Trukkapaleeswaram Mahadeva Temple Nadapuram, 47. Trukkapaleeswaram Mahadeva Temple Peralassery, 48. Trukkapaleeswaram Mahadeva Temple Niranam". www.vaikhari.org.