கடற்கொள்ளையர்களின் பொற்காலம்

கடற்கொள்ளையர்களின் பொற்காலம் (Golden Age of Piracy) என்பது 1650கள் முதல் 1730கள் வரையிலான காலகட்டத்திற்கான ஒரு பொதுவான பெயராகும், இக்காலப்பகுதியில் வடக்கு அத்திலாந்திக்கு, இந்தியப் பெருங்கடல்களின் வரலாற்றில் கடல் கொள்ளைகள் குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தன.[1]

1650கள்–1730கள்
1718 இல் ராபர்ட் மேனார்டுக்கு எதிரான பிளாக்பியர்டின் இறுதிப் போரின் 1920 ஓவியம்
அமைவிடம்வட அத்திலாந்திக்கு, இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல்

கடற்கொள்ளையர்களின் வரலாறுகள் பெரும்பாலும் கடற்கொள்ளையரின் பொற்காலத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கின்றனஃ

  • எசுப்பானிய மரபுரிமைக்குப் பிந்தைய காலம் (1715 முதல் 1726 வரை), எசுப்பானிய மரபுரிமைப் போரின் முடிவில் ஆங்கிலேய மாலுமிகளும் தனியார் தொழிலாளிகளும் போதிய பணிகள் இன்றி, கரிபியன், இந்தியப் பெருங்கடல், வட அமெரிக்கக் கிழக்குக் கடற்பரப்பிலும், மேகு ஆப்பிரிக்கக் கடற்பரப்பிலும் பெருமளவில் கடற்கொள்ளையர்களாக மாறிய காலம்.

பொற்காலத்தின் குறுகிய வரையறைகள் சில சமயங்களில் முதல் அல்லது இரண்டாவது காலகட்டங்களைத் தவிர்த்துவிடுகின்றன, ஆனால் பெரும்பாலானவை மூன்றில் ஒரு பகுதியையாவது உள்ளடக்கியிருக்கும். பிரபலமான பண்பாட்டில் சித்தரிக்கப்பட்டுள்ள கடற்கொள்ளையர்களின் நவீன கருத்தாக்கம், துல்லியமாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் கடற்கொள்ளையின் பொற்காலத்திலிருந்து பெறப்பட்டது.

பொற்காலத்தின் போது கடற்கொள்ளையர்களுக்கு பங்களித்த காரணிகளில் பரந்த கடல் பகுதிகளில் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்ட மதிப்புமிக்க சரக்குகளின் அளவு அதிகரிப்பு, சில பிராந்தியங்களில் ஐரோப்பியக் கடற்படைகள் குறைக்கப்பட்டமை, பல மாலுமிகள் ஐரோப்பியப் கடற்படைகளில் பெற்ற பயிற்சி மற்றும் அனுபவம் (குறிப்பாகப் பிரித்தானிய அரச கடற்படை) மற்றும் ஐரோப்பிய வெளிநாட்டுக் குடியேற்றங்களில் ஊழல் மற்றும் பயனற்ற அரசாங்கம் ஆகியவை அடங்கும். அக்காலப் பகுதியில் குடியேற்றவாதிகள் தொடர்ந்து கடற்கொள்ளையர்களுடன் சண்டையிட்டனர், அத்துடன் பல குறிப்பிடத்தக்க போர்களிலும் பிற தொடர்புடைய நிகழ்வுகளிலும் ஈடுபட்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. George Powell, "A Pirate's Paradise," in The Gentleman's Magazine, vol. CCLXXVI, N.S. 52, Jan–June 1894, p. 23.
  2. David Cordingly, ed. Pirates: A Worldwide Illustrated History, North Dighton, MA: World Publications Group, 1998, chapter 7, "The Pirate Round" by Jenifer G. Marx, p. 141.

வெளி இணைப்புகள்

தொகு
  • Fleming, Greg. "America's Worst Pirates". gregflemming.com.
  • "Golden Age of Piracy". goldenageofpiracy.org.
  • "The Golden Age of Piracy". The UnMuseum.
  • Vallar, Cindy. "The Golden Age of Piracy". cindyvallar.com.