கடற்படை தினம் (இசுரேல்)

சூன் மாதம் 30 ஆம் தேதி

இசுரேல் கடற்படை தினம் (Navy Day (Israel)) ஒவ்வோர் ஆண்டும் சூன் மாதம் 30 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் 1948 இல் ஹைஃபா துறைமுகம் 1947-1949 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாலசுதீனப் போரின் போது 1948 ஆம் ஆண்டு இதே நாளில்தான் அய்பா துறைமுகம் இசுரேலிய நாட்டவரால் கைப்பற்றப்பட்டது. பாரம்பரியமாக, இக்கடற்படை தினம் மாலை நேர கொண்டாட்டமாக அமைகிறது.

இசுரேல் கடற்படை தினத்தையொட்டி  கடற்படையினர் வெண்மை நிற  உடையணிந்து மரியாதை  செலுத்துதல்.

1993 ஆம் ஆண்டு இசுரேலிய கடற்படைத் தளபதி ஆமி அயலோன் என்பவர் பல போர்களின் வெற்றிகளைக் கொண்டாடும் நோக்கில் அக்டோபர் மாத இறுதி வாரத்தில் இசுரேலின் கடற்படை தினத்தை கொண்டாடத் திட்டமிட்டிருந்தார்.[1]

  • 1948 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் நாள், எகிப்தின் கடற்படை கப்பலான எல் ஆமிர் ஃபாரூக்" என்ற கப்பல் கடலில் மூழ்கியது.
  • 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாளன்று இப்ராகிம் எல் அவ்வல் எனும் பீரங்கிப் போர்க்கப்பல் இசுரேல் படையினரால் கைப்பற்றப்பட்டது.
  • 1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் நாள் முதல் 24 ஆம் நாள் வரை நடைபெற்ற யோம் கிப்பூர் போரில் இசுரேலியக் கடற்படையினரின் தீரச் செயல்களால் பெற்ற வெற்றி கொண்டாடப்பட்டது.

இசுரேல் கடற்படை தன்னுடைய ஐ.என்.எசு. ஈலாட்டு என்னும் போர் கப்பலை 1967 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் நாள் இழந்தது. இதன் காரணமாக நினைவு தின மாலை அனுசரிப்பு நிகழ்வும் மாற்றி அமைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வரை கடற்படை தினக் கொண்டாட்டங்கள் ஒரு வாரம் வரை நீடித்து இருந்தன. தற்பொழுது நடைமுறைச் சிக்கல்களைக் காரணமாகக் கொண்டு இந்நிகழ்வு ஆகத்து மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "יום חיל הים צויין אתמול".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்படை_தினம்_(இசுரேல்)&oldid=3690728" இலிருந்து மீள்விக்கப்பட்டது