கடல்சார் தொல்லியல்

கடல்சார் தொல்லியல்(Maritime archaeology) என்பது கடற்பகுதியோடு தொடர்புடைய தொல்லியல் ஆகும். இது, பழங்காலத்துக் கடற்கலங்கள், கடல்சார் கரையோர வசதிகள், கடல்வழிச் சரக்குகள், கடலுள் அமிழ்ந்த நிலத்தோற்றங்கள் என்பவற்றூடாக கடலுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஊடு தொடர்புகளை ஆய்வு செய்யும் துறைகளுள் ஒன்று. கடலில் மட்டுமன்றி ஏரிகள், ஆறுகள் முதலியவற்றிலும் கப்பல் போக்குவரத்துகள் இடம் பெறுவதால், இவை எல்லாவற்றுடனும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளின் வரலாற்றை ஆய்வு செய்யும் துறை நீரடித் தொல்லியல் (underwater archaeology) என அழைக்கப்படுவதுண்டு. இதன் ஒரு பிரிவாகக் கடற் பயணங்களுக்குப் பயன்பட்ட கலங்களின் அமைப்புத் தொழில்நுட்பம், கடல் பயணங்கள் என்பன தொடர்பான ஆய்வுத்துறை கடற்செலவுத் தொல்லியல் (nautical archaeology) எனப்படுகின்றது.[1][2][3]

பொதுவாகக் கடல்சார் தொல்லியல் களங்கள் கடலுள் அமிழ்ந்த துறைமுகப் பகுதிகள், மூழ்கிய கப்பல்கள் போன்றவற்றை உள்ளடக்குவனவாக உள்ளன. கடலுக்குள் அல்லது பிற நீர்ச் சூழல்களில் காணப்படும் தொல்பொருட்கள், நிலப்பகுதிகளில் காணப்படும் தொல்பொருட்கள் தொடர்பில் காணப்படுவதிலும் வேறுபட்ட காரணிகளின் தாக்கத்துக்கு உள்ளாகின்றன.

ஒரு நோக்கில், கடல்சார் தொல்லியல் நிலப்பகுதித் தொல்லியலில் காணப்படாத பிரச்சினைகளைக் கொண்டதும், நீரில் மூழ்குதல் போன்ற பல்வேறு சிறப்புத் திறமைகள் தேவைப்படுவதுமான தனியான துறையாகக் கருதப்படும் அதே வேளை, கடல்சார் நடவடிக்கைகள், நிலப்பகுதிகளின் பொருளியல் மற்றும் சமூக நிலைமைகளோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதனால் இன்னொரு நோக்கில், இது நிலஞ்சார் தொல்லியலுடன் ஒன்றிணைவான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இவற்றையும் பாக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Maritime, Offshore and Logistics Degree & Training Programs - EduMaritime". www.edumaritime.net.
  2. "MARITIME ARCHAEOLOGY". Encyclopedia of Archaeology. Oxford: Elsevier Science & Technology, 2008. 
  3. Muckelroy, K., "Maritime archaeology.", Cambridge University Press, 1978.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்சார்_தொல்லியல்&oldid=4164936" இலிருந்து மீள்விக்கப்பட்டது