கடல்வாழ் ஊர்வன

கடல்வாழ் ஊர்வன (Marine reptile) என்பது கடல் வாழ்விடத்தில் வாழும் ஊர்வன ஆகும். இவை கடல் சூழலில் நீர் வாழ் அல்லது அரைவாசி வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புகளுடன் தம்மை மாற்றியமைத்துக்கொண்டுள்ளன.

கடலில் வாழும் ஊர்வன:
 • உப்பு நீர் முதலை (மேல் இடது)
 • கடல் ஆமை (மேல் வலது)
 • கடற்பேரோந்தி (கீழ் இடது)
 • கடல் பாம்பு (கீழ் வலது)

ஆரம்பக் கால கடல்வாழ் ஊர்வன பேர்மியன் காலகட்டத்தில் பேலியோசூயிக் சகாப்தத்தில் தோன்றின. மீசோசூயிக் காலத்தில், பல ஊர்வன குழுக்கள் கடல் வாழ்க்கைக்கு ஏற்றவையாக மாறின, இதில் இச்தியோசர்கள், பிளீசியோசர்கள் (இந்த இரண்டு வரிசைகளும் "எனலியோசாரியா" குழுவில் ஒன்றுபட்டதாகக் கருதப்பட்டது) போன்ற பழக்கமான கிளாட்கள் அடங்கும்.[1] மொசாசர்கள், நோத்தோசர்கள், ப்ளாக்கோடோன்ட்கள், கடல் ஆமைகள், தாலடோசர்கள் மற்றும் தாலடோசூசியர்கள் அடங்கும். கிரீத்தேசியக் காலமுடிவில் இனவழிப்பு நிகழ்விற்குப்பின் கடல்வாழ் ஊர்வன குறைவான எண்ணிக்கையிலிருந்தன. ஆனால் ஆரம்பக்கால சீனோசூயிக்கில் "உண்மையான" கடலாமைகள், போத்ரெமிடிட்கள்,[2] பாலியோபிட் பாம்புகள், சோரிஸ்டோடெரா போன்ற சைமொடொசாரசு மற்றும் டைரொசாரிடு குரோகோடைலொமார்ப்சு எண்ணிக்கையில் அதிக இனங்களாகக் காணப்பட்டன. பல்வேறு வகையான கடல் கேவியாலிட் முதலைகள் சமீபத்தில் பிந்தைய மியோசீன் போலப் பரவலாகக் காணப்பட்டன.[3]

தற்போது ஏறத்தாழ 12000 ஊர்வன சிற்றினங்கள் மற்றும் துணை சிற்றினங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் 100 இனங்கள் மட்டுமே கடல்வாழ் ஊர்வன என வகைப்படுத்தப்படுகின்றன. தற்கால கடல் வாழ் ஊர்வனவற்றில் கடற்பேரோந்தி, கடல் பாம்புகள், கடலாமைகள் மற்றும் உப்புநீர் முதலைகள் அடங்கும்.[4]

இக்தியோசர்கள், பிளீசியோசர்கள், மெட்ரியோஹைஞ்சிட் தாலடோசுசியன்கள், மற்றும் மொசாசர்கள் போன்ற சில கடல் ஊர்வன, கடல்வாழ் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு மாறியுள்ளன. இவை நிலத்தில் இறங்க இயலாது மற்றும் குட்டிகளைத் தண்ணீரில் ஈன்று எடுக்கின்றன. கடல் ஆமைகள் மற்றும் உப்பு நீர் முதலைகள் போன்றவை கரைக்குத் திரும்பி முட்டையிடுகின்றன. சில கடல்வாழ் ஊர்வன அவ்வப்போது ஓய்வெடுக்கச் சுகமாகக் குளிர்காய நிலத்திற்கு வருகின்றன.

வாழும் ஊர்வன

தொகு
 
அழுங்காமை (எரெட்மோகெலிசு இம்ப்ரிகேட்டா )
  • கடல் ஆமைகள்: தற்போதுள்ள ஏழு கடல் ஆமை சிற்றினங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல கடற்கரையோரங்களில் வாழ்கின்றன. இருப்பினும் சில நீண்ட தூரத்திற்குக் குடிபெயர்ந்து எசுக்காண்டினாவியா வரை வடக்கே பயணிப்பதாக அறியப்படுகிறது. கடல் ஆமைகள் பெரும்பாலும் தனித்த வகை விலங்குகளாக இருக்கின்றன. இருப்பினும் சில இனப்பெருக்க காலங்களில் குழுவாகக் கூடுகின்றன. ஏழு ஆமை இனங்கள் மட்டுமே கடல் சார்ந்தவை என்றாலும், பல ஆமைகள் உப்புநீரிலும் வாழ்கின்றன.[4][5]
  • கடற் பாம்புகள் : கடல் ஊர்வனவற்றில் மிகுதியாக, 60க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான கடற் பாம்புகள் உள்ளன. அவை இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல நீரில் வாழ்கின்றன. இருப்பினும் மிகக் குறைந்த அறிக்கைகள், இவை அத்திலாந்திக்குப் பெருங்கடலில் காணப்படுவதாகக் கூறுகின்றன. கடல் பாம்புகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. கடற்பாம்புக் கடி ஆபத்தானது என்று அறியப்படுகிறது. இருப்பினும் பொதுவாக இவை தூண்டப்படும்போது மட்டுமே கடிக்கின்றன. பெரும்பாலும் மிகக் குறைந்த, அபாயகரமான அளவிலான நச்சினை மட்டுமே செலுத்துகின்றன. கடல் பாம்புகள் நிலப்பரப்பு பாம்புகளிலிருந்து செங்குத்தாகத் தட்டையான வால் மூலம் வேறுபடுகின்றன.[6]
  • கடற்பேரோந்தி: கடல் பேரோந்தி (இகுவான்கள்) கலாபகசுத் தீவுகளில் மட்டுமே வாழ்கின்றன. இவை கடல் வாழ் உயிரினங்களுக்கான பண்பினை முழுமையாகத் தழுவவில்லை. இவை கடல் தாவரங்களை மட்டுமே பிரத்தியோக உணவாக உண்ணுகின்றன. தண்ணீரில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றன என்றாலும், அவை நிலத்தில் கூடு கட்டுகின்றன; உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் சூரியக் குழியல் மேற்கொள்கின்றன. இவை நிலத்திற்கு வரும் போது நிலப்பரப்பு கொன்றுண்ணிகளால் வேட்டையாடப்படுகின்றன.[7]
  • உப்பு நீர் மற்றும் அமெரிக்க முதலைகள்: தற்போதுள்ள முதலைகளில் எதுவும் உண்மையிலேயே கடல் இல்லை; இருப்பினும், உப்பு நீர் முதலை (குரோகோடைலசு போரோசசு) உப்புநீரின் வசிப்பிடத்திற்கான தழுவல்களைக் கொண்டுள்ளது. இவை தென்கிழக்காசியா மற்றும் ஆத்திரேலியாவின் உப்புநீரில் வாழ்கிறது. உப்பு நீர் முதலைகள் தங்கள் உடலில் உள்ள அதிகப்படியான உப்பைச் சிறப்பு உப்பு சுரப்பிகள் மூலம் வெளியேற்றுகின்றன. இவை முதலைகளில் மிகப்பெரிய இனங்களும் மிகப்பெரிய ஊர்வன எனப் பெருமைப் பெறுகின்றன. இவை ஆறு மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை.[8] அமெரிக்க முதலைகள் (குரோகோடைலசு அக்குட்டசு) நன்னீர் வாழ்விடங்களை விட உப்பு நீரையே விரும்புகின்றன.[9]

அழிந்துபோன குழுக்கள்

தொகு
 
இக்தியோசரின் ஒரு இனமான ஆப்தால்மோசரசு ஐசீனியசின் புதைபடிவம்
  • இக்தியோசார்கள்: கடல் வாழ் ஊர்வனவாக இருந்தன. இவை டால்பின் போன்ற உடல் வடிவத்துடன் மீசோசோயிக் காலத்தில் செழித்து வளர்ந்தன.
  • சாரோப்டெடிஜியன்கள்: என்பது துடுப்பு அடிப்படையிலான நீர் வாழ் ஊர்வன. துடுப்புகள் நீந்துவதற்குப் பயன்படுகின்றன. இந்த குழுவில் பிளேசியோசர்கள், நோத்தோசார்கள் மற்றும் பிளாக்கோடோன்ட்கள் உள்ளன.
  • மொசாசர்கள்: பெரிய, நீர் வாழ் செதிலூரிகள் (நவீனக்கால பல்லிகள் மற்றும் பாம்புகளின் உறவினர்கள்) கிரெட்டேசியசு காலத்தின் முடிவில் கடலில் வேட்டையாடி, ஆதிக்கம் செலுத்திய ஊர்வனவாக இருந்தன.
  • தாலாட்டோசாரசு: இவை நீர் அல்லது பகுதி நீர் வாழ்வன. நிச்சயமற்ற டையாப்சிட் உயிரினக் கிளையாக இது வைக்கப்பட்டது. இதில் தாலாடோசாரோய்டு எனும் துணைக்குழு கீழ்நோக்கிய நீள மூக்கு, நொறுக்கக்கூடிய பல்வகைக்கும் பெயர் பெற்றவை.

பாதுகாப்பு

தொகு

கடல் ஊர்வனவற்றில் பெரும்பாலான இனங்கள் அருகிய இனமாகக் கருதப்படுகின்றன. கடலோர நிலங்களில் கூடு கட்டும் ஆமையின் வாழ்விடம் அழிதல், சுரண்டல் மற்றும் கடல் மீன்பிடித்தல் ஆபத்தில் உள்ளன.[5] வணிகச் சுரண்டல் (தோல்களின் விற்பனை) மற்றும் ஆசியாவில் கடல்நீர் மாசுபாடு காரணமாகக் பல வகையான கடல் பாம்புகள் அச்சுறுத்தப்படுகின்றன அல்லது ஆபத்தில் உள்ளன. கடல் இகுவான்கள் மட்டுப்படுத்தப்பட்ட வாழ்விட வரம்பின் காரணமாக அச்சுறுத்தப்படுகின்றன.[4] உப்பு நீர் முதலைகள் அழிவதற்கான ஆபத்து குறைந்த இனமாக உள்ளது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Williston SW (1914) Water Reptiles of the Past and Present University of Chicago Press (reprint 2002). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-4677-9
  2. Anny Rafaela de Araújo Carvalho; Aline Marcele Ghilardi; Alcina Magnólia Franca Barreto (2016). "A new side-neck turtle (Pelomedusoides: Bothremydidae) from the Early Paleocene (Danian) Maria Farinha Formation, Paraíba Basin, Brazil". Zootaxa 4126 (4): 491–513. doi:10.11646/zootaxa.4126.4.3.
  3. Langston, W. and Gasparini, Z. (1997). Crocodilians, Gryposuchus, and the South American gavials. In: Kay, R. F., Madden, R. H., Cifelli, R. L. and Flynn, J. J., eds., Vertebrate Paleontology in the Neotropics: The Miocene fauna of La Venta, Colombia. Washington, D.C. Smithsonian Institution Press, pp. 113-154.
  4. 4.0 4.1 4.2 Rasmussen, Arne Redsted; Murphy, John C.; Ompi, Medy; Gibbons, J. Whitfield; Uetz, Peter (2011-11-08). "Marine Reptiles". PLOS ONE 6 (11): e27373. doi:10.1371/journal.pone.0027373. பப்மெட்:22087300. 
  5. 5.0 5.1 Zug, George R. "Sea Turtle". Encyclopædia Britannica Online. பார்க்கப்பட்ட நாள் December 8, 2015.
  6. "Sea Snake". Encyclopædia Britannica Online. பார்க்கப்பட்ட நாள் December 8, 2015.
  7. "Marine Iguanas". National Geographic. பார்க்கப்பட்ட நாள் December 8, 2015.
  8. 8.0 8.1 "Saltwater crocodile". National Geographic. பார்க்கப்பட்ட நாள் December 8, 2015.
  9. Ellis, T. M. (1981). "Tolerance of Sea Water by the American Crocodile, Crocodylus acutus". Journal of Herpetology 15 (2): 187. doi:10.2307/1563379. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்வாழ்_ஊர்வன&oldid=3978291" இலிருந்து மீள்விக்கப்பட்டது