கடுகண்ணாவை அம்பலம

கடுகண்ணாவை அம்பலம (சிங்களம்:කඩුගන්නාව අම්බලම, ஆங்கிலம்:Kadugannawa Ambalama), கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் வழியில்[1] கடுகண்ணாவை என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சாலையோரத் தங்கு மடம் ஆகும். இது கடுகண்ணாவை வளைவுக்குச் செல்வதற்குச் சற்று முன்னர் உள்ளது. இந்த அம்பலம 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்]]) இது கொழும்பிலிருந்து கண்டிக்குக் குதிரையில் செல்பவர்களுக்கும், வணிகர்களுக்கும் பிரபலமான தங்கும் இடமாக இருந்தது.[2][3] கண்டியக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த இக்கட்டிடம் தொல்லியல் பெறுமானம் கொண்டது. இக்கட்டிடம் தொல்பொருளியல் திணைக்களத்தின் நுட்ப வழிகாட்டலுடன், சுற்றுலா அமைச்சினால் 300,000 இலங்கை ரூபா செலவில் திருத்தப்பட்டது.[4]

கடுகண்ணாவை அம்பலம

மேற்கோள்கள்

தொகு
  1. Gaveshaka (29 August 2004). "The ‘ambalama’ was the resting place". Sunday Times. http://www.sundaytimes.lk/040829/funday/2.html. பார்த்த நாள்: 2 February 2013. 
  2. Keeriyawatta, R.S (4 March 2007). "History on the wane". Sunday Times. http://www.sundaytimes.lk/070304/KandyTimes/505_kt1.html. பார்த்த நாள்: 2 February 2013. 
  3. Author Board, Lankadeepa (15 January 2012). "Ambalams of Ancient days". Lankadeepa இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140122073120/http://lankadeepa.lk/index.php/articles/21937. பார்த்த நாள்: 2 February 2013. 
  4. de Silva, Lionel (18 October 2009). "Ambalams-Our Architectural Heritage". Sunday Island இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402113340/http://www.island.lk/2009/10/18/leisure1.html. பார்த்த நாள்: 2 February 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுகண்ணாவை_அம்பலம&oldid=3365425" இலிருந்து மீள்விக்கப்பட்டது