கடையம் தோரண மலை முருகன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கடையம் தோரண மலை முருகன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கடையம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

அருள்மிகு தோரண மலை முருகன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:தோரணமலை, கடையம், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:தோரணமலை முருகன்
தாயார்:வள்ளி, தெய்வானை
சிறப்புத் திருவிழாக்கள்:திருக்கல்யாணம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் தோரணமலை முருகன், வள்ளி, தெய்வானை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

சிலைகள்

தொகு

இங்கே, சப்தகன்னிமாரம்மன் சன்னதியில் சப்தகன்னியர் சிலைகள் உள்ளன.

64 சுனைகள்

தொகு

தோரணமலை முழுவதிலும் சுமார் 64 சுனைகள் இருக்கின்றன. அடிவாரத்திலேயே இரண்டு சுனைகள் காணப்படுகின்றன. இந்தச் சுனைகளில் நீராடினால் சரும நோய்கள் நீங்குவதுடன், பல வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்ல, கடும் கோடைகாலத்திலும் வற்றாத இந்த ஜீவ சுனைகளில், ஒவ்வொரு சுனையின் நீரும் ஒவ்வொரு சுவையுடன், மருத்துவக்குணமும் கொண்டிருப்பது இயற்கையின் அற்புதம்

பாரதியார் பாடல் பெற்ற தலம்

தொகு

கடையத்தில் சிறிது காலம் வாழ்ந்த மகாகவி பாரதியார் ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

3. www.thoranamalai.com