தோரணமலை
தோரணமலை (ஆங்கில மொழி: Thoranamalai) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் புறநகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு மலை மற்றும் அதனைச் சார்ந்துள்ள பகுதியாகும்.[1] தென்காசி புறநகர்ப் பகுதியிலிருந்து, கடையம் நோக்கி செல்லும் வழியில் தோரணமலை அமைந்துள்ளது.[2] படுத்திருக்கும் யானை (வாரணம்) போல் காட்சியளிப்பதால் இம்மலை, 'வாரணமலை' என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி 'தோரணமலை' என்று கூறப்படுகிறது.[3] அறுபத்து நான்கு சுனைகள் கொண்ட தோரணமலையில், அந்த சுனைகளின் நீராலேயே, அங்குள்ள முருகன் கோயிலின் மூலவர் அபிசேகம் நடைபெறுகிறது.[4]
தோரணமலை Thoranamalai | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 432 m (1,417 அடி) |
ஆள்கூறு | 8°51′53″N 77°19′34″E / 8.8646°N 77.3261°E |
பெயரிடுதல் | |
பெயரின் மொழி | தமிழ் |
புவியியல் | |
அமைவிடம் | கடையம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | அகத்திய முனிவர் |
எளிய வழி | தென்காசியிலிருந்து கடையம் நோக்கி செல்லும் வழி |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 432 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தோரணமலையின் புவியியல் ஆள்கூறுகள் 8°51′53″N 77°19′34″E / 8.8646°N 77.3261°E ஆகும்.
புராண காலத் தொடர்புடைய தோரணமலை, அகத்திய முனிவர் மற்றும் அவருடைய சீடர் தேரையர் ஆகியோர் வாழ்ந்த பகுதியாகும்.[5] மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் நிறைந்த பகுதியாகும் தோரணமலை. அகத்தியர் மற்றும் தேரையர் ஆகியோரால் முதல் மண்டை ஓடு அறுவை சிகிச்சை நடைபெற்ற இடம் தோரணமலை.[6]
கடையம் தோரண மலை முருகன் கோயில், தோரணமலையில் அமையப் பெற்று, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.[7] மூலவராக தோரணமலை முருகன் அருள்பாலிக்கும் இக்கோயிலில் இராம தீர்த்தம், ஜம்பு நதி தீர்த்தம் ஆகியவை புண்ணிய தீர்த்தங்களாகும்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ மாலை மலர் (2019-01-23). "தோரணமலை முருகன் கோவில் - திருநெல்வேலி". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
- ↑ "வெற்றிவேல் முருகனுக்கு... 20 : துயரங்கள் போக்கும் தோரணமலை நாயகன்!". Hindu Tamil Thisai. 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
- ↑ தினத்தந்தி (2023-01-31). "அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
- ↑ "தொன்மை கதைகள் நிரம்பிய தோரணமலை முருகன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?". News18 Tamil. 2023-01-12. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
- ↑ மு. ஹரி, காமராஜ் (2021-12-28). "தோரணமலை மகா ஸ்கந்த ஹோமம்: ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் இந்த யாகத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
- ↑ S. Esakki Raj (2022-12-23). "அகத்தியரால் உலகின் முதல் மண்டை அறுவை சிகிச்சை நடைபெற்ற தோரணமலை கோவில்". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
- ↑ "Arulmigu Thoranamalai Murugan Temple, Kadaiyam Perumpathu, Kadaiyam Perumpathu - 627415, Tenkasi District [TM039499].,thornamalai kovil,subramaniyar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
- ↑ "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.