கட்டமைப்பியத் திரைப்படக் கோட்பாடு
கட்டமைப்பியத் திரைப்படக் கோட்பாடு என்பது குறியீடுகள், மரபொழுங்குகள் மூலம் திரைப்படங்களில் எவ்வாறு பொருள் விளக்கம் ஏற்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பில் கவனம் செலுத்துகின்றது. இது மொழிகள், தொடர்பாடல் மூலம் பொருளைப் புலப்படுத்தும் முறையிலும் வேறுபட்டது அல்ல. எளிய காட்சிகளின் தொகுப்பு ஒன்றின் மூலம் எவ்வாறு கூடுதலான எண்ணக்கருக்களைப் புரியவைக்க முடியும் என்பதை ஒரு எடுத்துக் காட்டு மூலம் விளங்கிக் கொள்ளலாம். ஒரு மனிதனின் வெறுமையான உணர்ச்சிகளோடு கூடிய முகத்தையும், பின்னர் நாவூறவைக்கும் உணவையும் மீண்டும் அம் மனிதனின் முக உணர்வுகளையும் காட்டுவதன் மூலம் பசியைப் புரிய வைக்க முடியும். உண்மையில் இக் காட்சிகள் எதுவுமே நேரடியாகப் பசி பற்றிக் குறிப்பிடவில்லை ஆனால், காட்சிகளின் ஒழுங்கமைப்பின் மூலம் பார்ப்பவர்களுக்கு இந்தத் தகவலை வழங்குதல் சாத்தியமாகின்றது.[1][2][3]
இத்தகைய கூடுதல் பொருள் விளக்கத்துக்கான காரணங்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்தல் சிக்கலானது. ஒளியமைப்பு, காட்சிக் கோணம், காட்சியின் நீளம், ஒழுங்கமைப்பு, பண்பாட்டுப் பின்னணி, மற்றும் பல கூறுகள் பொருள் விளக்கத்தை வலுவடையச் செய்யவோ அல்லது குறைக்கவோ கூடும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sternagel, Jörg, Deborah Levitt, Dieter Mersch, and Lesley Stern. Acting and Performance in Moving Image Culture: Bodies, Screens, Renderings, 2012. p. 307.
- ↑ "Peter Wollen obituary: the maven of British film theory | Sight & Sound". British Film Institute (in ஆங்கிலம்). 2019-12-20. பார்க்கப்பட்ட நாள் 2023-10-23.
- ↑ Cook, David A. (1975). "Some Structural Approaches to Cinema: A Survey of Models". Cinema Journal 14 (3): 41–54. doi:10.2307/1225133. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-7101. https://www.jstor.org/stable/1225133.