கட்டில் (திரைப்படம்)
2023 தமிழ்த் திரைப்படம்
கட்டில் (Kattil) என்பது 2023 ஆண்டு வெளியான இந்திய தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் வெளியான திரைப்படம் ஆகும். பி. லெனின் கதை, திரைக்கதை, உரையாடல் எழுத, இ. வி. கணேஷ் பாபு இயக்கி நாயகனாக நடித்துள்ளார். இவருடன் சிருஷ்டி டங்கே நாயகியாக நடித்தார். இப்படத்தின் வழியாக கீதா கைலாசம், இந்திரா சௌந்தரராஜன், சியாம் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாயினர். இப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து, மதன் கார்க்கி ஆகியோர் எழுதியுள்ளனர். 'ஒய்டு ஆங்கிள்' ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெட்டி ஒலி சாந்தி நடன இயக்கத்தை செய்துள்ளார்.[1]
கட்டில் | |
---|---|
இயக்கம் | இ. வி. கணேஷ் பாபு |
கதை | பி. லெனின் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | இ. வி. கணேஷ் பாபு சிருஷ்டி டங்கே கீதா கைலாசம் இந்திரா சௌந்தரராஜன் சியாம் |
ஒளிப்பதிவு | 'ஒய்டு ஆங்கிள்' ரவிசங்கரன் |
படத்தொகுப்பு | பி. லெனின் |
கலையகம் | மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 8 திசம்பர் 2023 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுஇசை
தொகுஇப்படத்திற்கான இசையை சிறீகாந்து தேவா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து, மதன் கார்க்கி ஆகியோர் எழுதியுள்ளனர்.[2]