கணவாய்த் தோடு

செபிடே குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களிலும் காணப்படும் உள்ளமைப்பு

கணவாய்த் தோடு (Cuttlebone) என்பது கடினமான ஒரு உள் உறுப்பு ஆகும். இது தலைக்காலிகளான தோட்டுக்கணவாய் என்று அழைக்கப்படும் செபிடே குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களிலும் காணப்படுகிறது.

கணவாயின் மிதவை உறுப்பும், அதன் உள்ளுருப்பு அறையான, கணவாய்த் தோடின் மேல் மற்றும் கீழ் தோற்றம்.
செபியா அஃபிசினாலிஸின் கணவாய்த் தோடு (இடமிருந்து வலமாக: அடிப்பகுதி, மேல்பகுதி, பக்கவாட்டுத் தோற்றங்கள்)
Common cuttlefish Sepia officinalis
கணவாய்த் தோடுடன் ஒரு ஆமை
செபியா ருகூலோசாவின் ப்லியோசீன் இனத்தின் புதைபடிவ புதைபடிவ கணவாய்த் தோடு
கிளாடியஸ் டிராக்கியுதிசின் புதைபடிவ கணவாய்த் தோடு [1]

கணவாய்த் தோடானது முதன்மையாக அரகோனைட்டால் ஆனது. இது கணவாய்கள் அடி ஆழத்துக்குச் செல்லவும் மேலே வரவுமான மிதவை நிலையை கட்டுப்படுத்த உதவும் வாயு நிரப்பப்பட்ட அறை ஆகும். இந்த மிகவும் மாறுபட்ட அறையானது கணவாயின் வயிற்றுப்புறத்தில் உள்ளது. [2] கணவாய்த் தோடானது எலும்பின் நுண்ணிய அமைப்பாக பல நுண்ணறைகளைக் கொண்ட கொள்களன்களக் கொண்டுள்ளது. நீரின் ஆழத்துக்குச் செல்ல விரும்பினால் நுண்ணறைகளில் காற்றுக்கு பதில் நிரை பரிமாற்றம் செய்து எடையை ஏற்றி உள்ளே செல்லும். அதேபோல மேலே வர விரும்பினால் நீரை வெளியேற்றி எடையைக் குறைத்துக் கொண்டு மேலெழும்பும்.

இனங்களைப் பொறுத்து, கணவாய்த் தோடுகள் 200 முதல் 600 மீட்டர்கள் (660 முதல் 1,970 அடி) ஆழம் வரை நொறுங்காமல் தாங்கும். இந்த ஆழம் தாங்கும் தன்மை காரணமாக, பெரும்பாலான கணவாய் மீன்கள் கண்ட திட்டின் ஆழ்கடல் நீரின் கடல் தளத்தில் வாழ்கின்றன.

மிகப்பெரிய கணவாய்த் தொடு செபியா அபாமா என்ற மிகப்பெரிய ஆத்திரேலிய கணவாய்க்கு உள்ளது. இது மேற்பரப்புக்கும் அதிகபட்சம் 100 மீட்டர் ஆழத்திற்கும் இடையில் வாழ்கிறது.

மனித பயன்பாடுகள்

தொகு

கடந்த காலத்தில், கணவாய்த் தோடுகள் கொண்டு மெருகூட்டிப் பொடி தயாரிக்கப்பட்டது. இந்தப் பொடிகள் பொற்கொள்ளர்களால் பயன்படுத்தப்பட்டது. [3] மேலும் இந்தத் தூள் பற்பசையிலும் சேர்க்கப்பட்டது, [4] மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக ஒரு அமிலநீக்கியாக [3] அல்லது ஒரு உறிஞ்சியாக [5] [6] பயன்படுத்தப்பட்டன. மேலும் 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் கலைப் பொருட்களை செதுக்கி செய்யவும் இவை பயன்படுத்தப்பட்டன. [7] [8] [9] [10] [11]

இன்று, கணவாய்த் தோடுகள் பொதுவாக கூண்டில் வைத்து வளர்க்கப்படும் பறவைகள், சின்சில்லாக்கள், துறவி நண்டுகள், ஊர்வன, இறால், நத்தைகள் போன்றவற்றிர்க்கு தேவைப்படும் கல்சியம் சத்தை ஈடுகட்ட உணவாக பயன்படுத்தப்படுகின்றது. [12]

சுண்ணாம்பு உற்பத்தி

தொகு

கார்பனேட் நிறைந்த பயோஜெனிக் மூலப்பொருளாக, கணவாய்த் தோடுகள் கால்சிடிக் சுண்ணாம்பு உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ளது. [13]

நகை தயாரித்தல்

தொகு

கணவாய்த் தோடுகள் அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடியதாகவும், எளிதில் செதுக்க ஏற்றதாக உள்ளதால், இது நகைகள் மற்றும் சிறிய சிற்பப் பொருட்களை உருவாக்குவதற்கான சிறிய உலோக வார்ப்புகளுக்கான அச்சுகளை உருவாக்கும் பொருளாக பயன்படுகிறது. [a]

இதை பியூட்டர் என்னும் உலோகக் கலவை கொண்டு செய்யப்படும் வார்ப்புக்கு ஒரு அச்சாகவும் பயன்படுத்தலாம்.

விளக்க குறிப்புகள்

தொகு
  1. Jewelers prepare cuttlebone for use as a mold by cutting it in half and rubbing the two sides together until they fit flush against one another. Then the casting can be done by carving a design into the cuttlebone, adding the necessary sprue, melting the metal in a separate pouring crucible, and pouring the molten metal into the mold through the sprue. Finally, the sprue is sawed off and the finished piece is polished.

மேற்கோள்கள்

தொகு
  1. Fuchs, D.; Engeser, T.; Keupp, H. (2007). "Gladius shape variation in coleoid cephalopod Trachyteuthis from the upper Jurassic nusplingen and Solnhofen plattenkalks". Acta Palaeontologica Polonica 52 (3): 575–589. http://www.app.pan.pl/archive/published/app52/app52-575.pdf. 
  2. Rexfort, A.; Mutterlose, J. (2006). "Stable isotope records from Sepia officinalis — a key to understanding the ecology of belemnites?". Earth and Planetary Science Letters 247 (3–4): 212. doi:10.1016/j.epsl.2006.04.025. Bibcode: 2006E&PSL.247..212R. 
  3. 3.0 3.1 "Uses for cuttlebone. The time when it was used as a medicine (1912)". Newspapers.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.
  4. "Do you know this?". http://nla.gov.au/nla.news-article136318704. 
  5. "Wesleyan anniversary". http://nla.gov.au/nla.news-article65428345. 
  6. "Carnival at Norwood". http://nla.gov.au/nla.news-article199944165. 
  7. "Eleanor Barbour's pages for country women". http://nla.gov.au/nla.news-article92381055. 
  8. "Note book cuttlefish". http://nla.gov.au/nla.news-article54240956. 
  9. "Models from cuttle-fish". http://nla.gov.au/nla.news-article206228703. 
  10. "Back to semaphore celebrations". http://nla.gov.au/nla.news-article212976716. 
  11. "Out among the people". http://nla.gov.au/nla.news-article48912283. 
  12. A Guide to Squid, Cuttlefish, and Octopuses of Australasia. CSIRO Publishing.
  13. Ferraz, E.; Gamelas, J.A.F.; Coroado, J.; Monteiro, C.; Rocha, F. (2020-07-20). "Exploring the potential of cuttlebone waste to produce building lime" (in en). Materiales de Construcción 70 (339): 225. doi:10.3989/mc.2020.15819. பன்னாட்டுத் தர தொடர் எண்:1988-3226. http://materconstrucc.revistas.csic.es/index.php/materconstrucc/article/view/2294. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவாய்த்_தோடு&oldid=3769502" இலிருந்து மீள்விக்கப்பட்டது