அமிலநீக்கி
அமிலநீக்கி ( antacid) என்பது வயிற்றின் அமிலத்தன்மையை சமன்செய்யும் ஒரு பொருளாகும். மேலும் இப்பொருள் நெஞ்சு எரிச்சலையும் நீக்கி விடுவிக்கிறது.
மருத்துவப் பயன்கள்
தொகுமருத்துவர்களின் பரிந்துரைக் கடிதம் இல்லாமலேயே கடைகளில் வாங்கிக் கொள்ள முடிகின்ற அமிலநீக்கிகள் வாய்வழியாக உட்கொள்ளப்படுகின்றன. அவ்வப்போது ஏற்படும் நெஞ்செரிவு , இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ஆகிய காரணங்களுக்காக இதை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அறிகுறிசார்ந்த சிகிச்சைகளுக்கு வேண்டுமானால் அமிலநீக்கியைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறார்கள்.[1]
எச்2 ஏற்பி எதிர்ப்பிகள் அல்லது புரோட்டான் குழல் தடுப்பிகள் முதலான அமிலம் குறைக்கும் மருந்துகளில் இருந்து அமிலநீக்கிகள் வேறுபட்டவையாகும். இவை வயிற்றுப் புண்களுக்கு காரணமான எலிக்கோபேக்டர் பைலோரி பாக்டீரியாக்களைக் கொல்வதில்லை.[1]
பக்க விளைவுகள்
தொகுமக்னீசியம் வகை அமிலநீக்கிகளால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம், கால்சியம் அல்லது அலுமினியம் வகை அமிலநீக்கிகள் மலச்சிக்கலையும் , அரிதாக, நீண்ட கால பயன்பாட்டினால் சிறுநீரகத்தில் கற்களையும் ஏற்படுத்தலாம். அலுமினிய வகை அமிலநீக்கிகள் நீண்ட கால பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்தான எலும்புப்புரை நோயை உண்டாக்கிவிடலாம்.[2]
அமிலநீக்கியின் வினைவழிமுறை
தொகுஅமிலநீக்கிகளில் கார அயனிகளைக் கொண்டிருப்பதால் அவை வயிற்றிலுள்ள அமிலத்தை நேரடியாக நடுநிலையாக்கம் செய்கின்றன.[3]
நன்றாக அறியப்பட்ட சில அமிலநீக்கி வகைகள்
தொகுகார அயனிகளைக் கொண்ட வேதி உப்புகளே எதிரயனியாகின்ற அமிலநீக்கிகளாகும். பொதுவாக பைகார்பனேட்டுகள் கார அயனிகளாக பயன்படுத்தப்படும் ஆனால் ஐதராக்சைடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
பொருள் | கார அயனி | அலுமினியம் | கால்சியம் | மக்னீசியம் | பொட்டாசியம் | சோடியம் |
---|---|---|---|---|---|---|
அல்கா-செல்ட்சர் | பைகார்பனேட்டு | X | X | |||
ஆண்ட்ரூசு அமிலநீக்கி | பைகார்பனேட்டு | X | ||||
பிரையோச்சி | பைகார்பனேட்டு | X | ||||
ஈகுவேட்டு | பைகார்பனேட்டு | X | X | X | ||
மாலோக்சு (நீர்மம்) | பைகார்பனேட்டு | X | X | |||
மாலோக்சு (மாத்திரை) | பைகார்பனேட்டு | X | ||||
மக்னீசியாவின் பால் | ஐதராக்சைடு | X | ||||
பெப்டோ-பிசுமோல் | தெரியவில்லை | |||||
குழந்தை பெப்டோ பிசுமோல் | பைகார்பனேட்டு | X | ||||
ரென்னி (மாத்திரைகள்) | பைகார்பனேட்டு | X | X | |||
ரோலெய்டுசு | பைகார்பனேட்டு | X | X | |||
தம்சு | கார்பனேட்டு | X | ||||
மைலாண்டா | ஐதராக்சைடு | X | X | |||
ஈனோ | பைகார்பனேட்டு | X | ||||
காவிசுகான் | பைகார்பனேட்டு | X | X | |||
கெலுசில் | ஐதராக்சைடு | X | X | |||
விரைவு-ஈசு | கார்பனேட்டு | X | X |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 U.S. Department of Health & Human Services. Agency for Healthcare Research and Quality 23 September 2011 Consumer Summary - Treatment Options for GERD or Acid Reflux Disease: A Review of the Research for Adults பரணிடப்பட்டது 2014-10-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ U.S. Department of Health and Human Services, National Institutes of Health, U.S. National Library of Medicine. Page last updated: 07 November 2014 Medline Plus: Taking Antacids
- ↑ Zajac, P; Holbrook, A; Super, ME; Vogt, M (March–April 2013). "An overview: Current clinical guidelines for the evaluation, diagnosis, treatment, and management of dyspepsia". Osteopathic Family Physician 5 (2): 79–85. doi:10.1016/j.osfp.2012.10.005.