கண்டமத்து கேசவப்பிள்ளை

கண்டமத்து செண்பகராமன் பத்மநாபன் கேசவப்பிள்ளை (Chempakaraman Padmanabhan Kesava Pillai Avergal of Kandamath) (1830-1924) இவர் ஓர் இந்திய ஜமீந்தாராக இருந்தார். திருவாங்கூரின் ஜென்மிகளில் ஒருவரான இவர், மூலம் திருநாளின் பிரபலமான அரசவையில் உறுப்பினராக இருந்தார். மருமக்கதாயம் வாரிசு சட்டங்களில் மாற்றங்களை கடுமையாக எதிர்த்ததற்காக இவர் அறியப்பட்டார்.

கண்டமத்து கேசவப்பிள்ளை
நெய்யாற்றிங்கரை, செங்கால் ஆகியவற்றின் ஜென்மி
அரசர் ஆயில்யம் திருநாள் இராமவர்மன் விசாகம் திருநாள் இராம வர்மன் சிறீ மூலம் திருநாள்
முன்னவர் கண்டமத்தின் கணக்கு செம்பகராமன் பத்மநாபன் மூத்த பிள்ளை
பின்வந்தவர் நெய்யாற்றிங்கரை பத்மநாப பிள்ளை
மூலம் திருநாளின் பிரபல சபை]
நெய்யாற்றிங்கரை
பின்வந்தவர் கேரளாவில் நிலச்சீர்திருத்தம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் திருவிதாங்கூரில் உள்ள வைக்கம் என்ற இடத்தில் பிறந்தார். அங்கு இவரது தந்தை நீலகண்டன் நம்பூதிரிப்பாடு வைக்கம் கோயிலுடன் இணைக்கப்பட்ட ஒரு பிரசங்க பிரமுகராக இருந்தார். இவரது தாயார் கண்டமத்தின் நிலப்பிரபுத்துவ தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். [1]

சீர்திருத்தங்கள் தொகு

மூலம் திருநாளின் புதிதாக அமைக்கப்பட்ட அரசவையில் [2] மகாராஜாவால் நெய்யாற்றிங்கரை பகுதிக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டு, [3] அங்கிருக்கும் தனது நிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். தீண்டாமை, சிறு குற்றங்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தண்டனை குறித்து இவர் தாராளவாத பார்வையைக் கொண்டிருந்தார். தொழிலாள வர்க்கத்தின் கல்விக்கும் பொது மேம்பாட்டிற்காகவும் பல்வேறு சீர்திருத்தங்களைத் தொடங்கினார். நெய்யாற்றிங்கராவின் செங்காலில் உள்ள பள்ளி பொட்டாவில் தேவாலயப் பள்ளியைக் கட்டுவதற்கும் நடத்துவதற்கும் இவர் ஆங்கிலேய தேவாலயத்திற்கு நிலம் ஒதுக்கினார்.

இறப்பு தொகு

இவர் 1924இல் திருவிதாங்கூரில் இறந்தார்.

மரபு தொகு

கேரளாவில் பொதுவுடமைக் கட்சியால் நில சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, செங்காலில் உள்ள இவரது மூதாதையர் தோட்டமான கண்டமத்து, இவரது பெரும்பாலான நிலங்கள் ஆகியவற்றை அரசியல் கொந்தளிப்பில் இவரது வாரிசுகள் இழந்தனர். குடும்பம் உடல்நலம் கல்வி சார்ந்த பல தொண்டு நிறுவனங்களைத் தொடர்கிறது. இவரது உருவப்படம் கேரளாவில் உள்ள சட்டமன்ற நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. [4]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Land Revenue Assessment Papers 1867 ii/1868/xiv of Southern Division held at Arayoor Village Office, Neyyatinkara, Kerala
  2. Page 201, History of the Kerala Legislative Assembly, KLA Archives, Trivandrum, Kerala http://www.niyamasabha.org/
  3. Page 201, History of the Kerala Legislative Assembly, KLA Archives, Trivandrum, Kerala http://www.niyamasabha.org/
  4. Karunakaran Nair in Tharishuthala Kudumba Diary edited by K. Karunakaran Nair 2001 accessed from Kerala Council for Historical Research http://www.keralahistory.ac.in/test/family.htm பரணிடப்பட்டது 2016-08-18 at the வந்தவழி இயந்திரம் See 45