கண்டி மன்னர் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கீழே வருவது 1473 முதல் 1815 வரைகண்டி அரசை ஆண்ட மன்னர்களின் பட்டியல் ஆகும். இவ்வரசானது, கோட்டை அரசின் அரசியல் பிரமுகனான சேனா சம்மத விக்கிரமபாகுவால் ஆரம்பிக்கப்பட்டது. கோட்டையை ஆண்ட ஸ்ரீசங்கபோதி வமிசம், தினஜார வமிசம், கண்டி நாயக்கர் வமிசம் ஆகிய மூன்று அரச கொடிவழிகளால் கண்டி அரசு ஆளப்பட்டது. தினஜார, கோட்டை அரசு ஆகியவற்றின் கால எல்லைகள் மிகத்திருத்தமானவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசங்கபோதி வமிசம் (1473–1592)

தொகு
படம் பெயர் பிறப்பு இறப்பு ஆட்சி ஆரம்பம் ஆட்சி முடிவு குறிப்புகள்
  சேனா சம்மத விக்கிரமபாகு - - 1473 1511 கோட்டை அரசின் பிரதிநிதி
  ஜெயவீர ஆஸ்தானன் - - 1511 1551 சேனா சம்மத விக்கிரமபாகுவின் மைந்தன்
  கரலியத்தே பண்டாரன் - - 1551 1581 ஜெயவீரனின் மகன்
  தோனா கதரீனா
(குசுமாசனதேவி)
- - 1581 1581 கரலியத்தே பண்டாரன் மகள்
  முதலாம் ராஜசிங்கன் 1544 1593 1581 1591 சீதாவாக்கை மன்னன். குசுமாசனையை அகற்றி ஆட்சியைக் கைப்பிடித்தான்

தினஜார வமிசம் (1590–1739)

தொகு
படம் பெயர் பிறப்பு இறப்பு ஆட்சி ஆரம்பம் ஆட்சி முடிவு குறிப்புகள்
  முதலாம் விமலதர்மசூரியன் - 1604 1590 1604 விஜயசுந்தர பண்டாரன் மகன்
  செனரத் மன்னன் - 1635 1604 1635 விமலதர்மசூரியனின் ஒன்று விட்ட சகோதரன்
  இரண்டாம் இராஜசிங்கன் 1608 டிசம்பர் 6, 1687 1635 நவம்பர் 25, 1687 செனரத்துக்கும் குசுமாசனைக்கும் பிறந்தவன்
  இரண்டாம் விமலதர்மசூரியன் - யூன் 4, 1707 1687 யூன் 4, 1707 இரண்டாம் இராஜசிங்கன் மகன்
  வீர நரேந்திரசிங்கன் 1690 மே 13, 1739 யூன் 4, 1707 மே 13, 1739 இரண்டாம் விமலதருமன் மைந்தன்

கண்டி நாயக்கர் (1739–1815)

தொகு
படம் பெயர் பிறப்பு இறப்பு ஆட்சி ஆரம்பம் ஆட்சி முடிவு குறிப்புகள்
  ஸ்ரீ விஜய ராஜசிங்கன் - ஆகஸ்டு 11, 1747 மே 13, 1739 ஆகஸ்டு 11, 1747 நரேந்திர சிங்கன் மைத்துனன்
  கீர்த்தி சிறீ இராஜசிங்கன் 1734 யனவரி 2, 1782 ஆகஸ்டு 11, 1747 யனவரி 2, 1782 *விஜய ராஜசிங்கன் மனைவியின் தமையன்
  சிறீ இராஜாதி இராஜசிங்கன் - யூலை 26, 1798 யனவரி 2, 1782 யூலை 26, 1798 கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் தமையன்
  ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1780 Jan 30, 1832 யூலை 26, 1798 மார்ச்சு 5, 1815 இராஜாதி ராஜசிங்கன் மைத்துனன்

மேலும் காண

தொகு

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டி_மன்னர்_பட்டியல்&oldid=3326248" இலிருந்து மீள்விக்கப்பட்டது