கண்ணகி (செய்தித்தாள்)

கண்ணகி (Kannagi (newspaper)) என்பது தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் மொழி செய்தித்தாள் ஆகும். இதன் முதல் பிரதி முன்னாள் இந்தியத் தேசிய இராணுவ அதிகாரி எஸ். சக்தி மோகனின் முயற்சியால் 29 மே 1952 அன்று வெளியிடப்பட்டது. இது 1948-ல் தொடங்கப்பட்ட நேதாஜி வெளியீட்டிற்குப் பிறகு வந்தது. விரைவில் இது தமிழ்நாட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் பிராந்திய அமைப்பாக மாறியது.[1]

கண்ணகி தன்னை ஒரு 'புரட்சிகர தேசியவாத இரு வார இதழ்' என்று அடையாளப்படுத்திக் கொண்டது. மேலும் இதன் குறிக்கோள் 'அனைத்து அதிகாரமும் மக்களுக்கே' என்பதாகும். 1957 வாக்கில் கண்ணகியின் விற்பனை சுமார் 10 000 பிரதிகளாக இருந்தது.[1]

1977ல் கண்ணகியின் வெளியீடு நிறுத்தப்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Bose, K.; Forward Bloc. Madras: 1988, Tamil Nadu Academy of Political Science. pp. 168-169
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணகி_(செய்தித்தாள்)&oldid=3781631" இலிருந்து மீள்விக்கப்பட்டது