கண்ணன் இசைக்குழு

கண்ணன் இசைக்குழு இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஓர் இசைக்குழுவாகும். “கண்ணன் கோஷ்டி” என்று இது மக்களால் அழைக்கப்பட்டது. கருநாடக இசை, பொப் இசை, மெல்லிசை, பக்தி இசை, திரையிசை, நாடக இசை என பல்திறமை கொண்ட 'இசைவாணர்' கண்ணன் என்பவரால் இக்குழு வழிநடத்தப்பட்டது.

இவரது இசைக்குழுவில் தோல் வாத்திய கலைஞர்களாக அப்பி, பபி என்ற இரட்டையர்களும், ராதாகிருஷ்ணன் (வயலின்) , சிவபாதம் (மிருதங்கம்), கலாமணி (புல்லாங்குழல்), சந்தானம் (தபேலா), சனூன் (எக்கோடியன்) மற்றும் காந்தன், சகாதேவன் போன்ற இசைக்கலைஞர்களுடன் கிருஷ்ணமூர்த்தி, ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்ட பொன்னம்பலம், ஈழத்து சுந்தராம்பாள் என்று அழைக்கப்பட்ட கனகாம்பாள் சதாசிவம், நாகர்கோவில் விஜயரட்னம், அமுதன் அண்ணாமலை, ஸ்ரனி சிவானந்தன் போன்றவர்களும் இணைந்து தமது பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

கண்ணன் இசைக்குழுவை நடத்திவந்த திரு.கண்ணன் அவர்கள் மேடை நாடகங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்று நாச்சிமார் கோவிலை சேர்ந்த “வண்ணக்கலைவாணர்” நாடகக்குழுவிற்கும், அதன் பின்னர் புகழ்பெற்ற நாடக இயக்குனர் நட்சத்திரவாசி பாலேந்திராவின் யுகதர்மம், முகம் இல்லாத மனிதர்கள், துக்ளக் போன்ற நாடகங்களிற்கும் இசையமைத்துள்ளார். இதன்பின்னர் இசையமைப்பாளர் றொக்சாமியுடன் இணைந்து இலங்கை வானொலியில் பணியாற்றினார்.

திரைப்படங்களில் இசையமைப்பு தொகு

தெய்வம் தந்த வீடு, கோமாளிகள், ஏமாளிகள் போன்ற ஈழத்துத் தமிழ் திரைப்படங்களுக்கு கண்ணன் இசையமைத்துள்ளார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணன்_இசைக்குழு&oldid=3700056" இலிருந்து மீள்விக்கப்பட்டது