கண்ணாடி மாளிகை

கண்ணாடி மாளிகை 1962 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சாமி-மகேசு இரட்டையர் இத்திரைப்படத்தை இயக்கினர். இராணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் டி. ஆர். இராதாராணி இத்திரைப்படத்தைத் தயாரித்தார். இராதாராணி கதைநாயகியாகவும் நடித்தார். இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, எஸ். ஏ. அசோகன், வி. நாகையா, எஸ். டி. சுப்புலட்சுமி, ஏ. கே. மோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

கண்ணாடி மாளிகை
இயக்கம்சாமி-மகேசு
தயாரிப்புடி. ஆர். இராதாராணி
கதைசானி
நடிப்புடி. ஆர். இராதாராணி
எம். ஆர். ராதா
எஸ். ஏ. அசோகன்
வி. நாகையா
எஸ். டி. சுப்புலட்சுமி
ஏ. கே. மோகன்
கலையகம்இராணி திரைப்படத் தயாரிப்பாளர்கள்
வெளியீடு1962
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு எம். ஆர். ராதாவுக்கு 60,000 (2020 இல் நிகர மதிப்பு 3.8 million or US$48,000) வழங்கப்பட்டது. டி. ஆர். இராதாராணியின் சகோதரி டி. ஆர். சரோஜா ஒரு முன்னணி வேடத்தில் இப்படத்தில் நடித்தார். வசனகர்த்தாவாக சாமி செயல்பட்டார். கருப்பு-வெள்ளையில் வெளியான இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒகேனக்கலில் எடுக்கப்பட்டன. ஒளிப்பதிவுக் கலைஞராக சிட்டி பாபு பணியாற்றினார்.[1] கோபிச்செட்டிப்பாளையத்திலும் படப்பிடிப்பு நடந்தது.[2]

வரவேற்பு

தொகு

திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை கண்ணாடி மாளிகை திரைப்படத்தின் கதைக்களம், நடிகர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டினார். ஆனால் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றும் குறிப்பிட்டார். இத்திரைப்படத்தின் தெலுங்கு மொழி-பதிப்புத் திரைப்படமான அடலா மேடாவும் வெற்றிபெறவில்லை.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாடி_மாளிகை&oldid=4089045" இலிருந்து மீள்விக்கப்பட்டது