கதர்னி அரிசி
கதர்னி அரிசி (Katarni rice) என்பது தனித்துவ சுவை, நறுமணம் கொண்ட குறுகிய தானியம் ஆகும்.[1] இந்த அரிசி இந்தியாவில் பீகார் மாநிலத்தில் பாகல்பூர் மற்றும் பாங்கா மாவட்டங்களில் பூர்வீகமாக விளைவிக்கப்படுகிறது. யும் கதர்னி அரிசிக்குப் பீகாரில் மட்டுமின்றி நாடு முழுவதும் தேவை உள்ளது.
தனிச்சிறப்பு கொண்ட கதர்னி அரிசி அழிவின் அச்சுறுத்தலை தற்பொழுது எதிர்கொண்டுள்ளது. 1991-92 முதல், கதர்னி நெல் சாகுபடி பரப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நீர்ப்பாசனச் செலவு அதிகரிப்பு, மற்ற நெல் வகைகளின் அதிக உற்பத்தி, சந்தையில் கலப்பட வகை அறிமுகம் காரணமாக உள்ளூர் மற்றும் உலக சந்தையில் இதன் தேவை குறைந்து வருகிறது. இது சமீபத்தில் பீகாரின் பாகல்பூர், பாங்கா மற்றும் முங்கர் மாவட்டங்களின் கீழ் உள்ள சில பகுதியில் புவியியல் சார் குறியீட்டினை இதன் தனித்துவமான பண்புகள் காரணமாகப் பெற்றுள்ளது.[2]
கதர்னி அரிசி பண்புகள்: பயிர் காலம் (நாட்கள்): 160; மகசூல் (t/ha): 1-1.5; தாவர உயரம் (செ.மீ): 130-175; தானிய அளவு: சிறியது; தானிய வாசனை: வலுவானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Katarni Rice - Authentic GI Tagged Agricultural produce". www.gitagged.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
- ↑ Apr 1, TNN / Updated:; 2018; Ist, 11:52. "GI tag for jardalu mango, katarni rice and betel leaf". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)