கதா பொலிட்

அமெரிக்க ஊடகவியலாளர்

கதா பொலிட் (Katha Pollitt; பிறப்பு அக்டோபர் 14, 1949) ஒரு அமெரிக்க கவிஞரும், கட்டுரையாளரும், விமர்சகரும் ஆவார். இவர் நான்கு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் இரண்டு கவிதைப் புத்தகங்களை எழுதியுள்ளார். கருக்கலைப்பு, இனவாதம், பொதுநலச் சீர்திருத்தம், பெண்ணியம் மற்றும் வறுமை உள்ளிட்ட இடதுசாரிக் கண்ணோட்டத்தில் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் இவரது எழுத்து கவனம் செலுத்துகிறது.

கதா பொலிட்
2008 வாக்கில் கதா பொலிட்
2008 வாக்கில் கதா பொலிட்
பிறப்புஅக்டோபர் 14, 1949
புரூக்ளின், நியூயார், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தொழில்
  • எழுத்தாளர்
  • பத்திரிக்கையாளர்
  • கவிஞர்
  • கலாச்சார விமர்சகர்
தேசியம்அமெரிக்கர்
காலம்20 ஆம் ஆண்டின் பிற்பகுதி, 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
வகைகட்டுரைகள், கவிதைகள், பத்திரிகை கட்டுரைகள், புனைகதை அல்லாதவை
கருப்பொருள்இனவாதம், பெண்ணியம், அரசியல், கருக்கலைப்பு உரிமைகள்
இணையதளம்
kathapollitt.blogspot.com

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

பொலிட், நியூயார்க்கின் புரூக்ளின் ஹைட்ஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர் மற்றும் இவரது தாயார் நிலம் விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட்ட ஒரு முகவர். [1] பொலிட்டை கவிதையில் ஆர்வத்தைத் தொடர பெற்றோர் ஊக்கப்படுத்தினர். இவரது தந்தை சீர்திருத்தத் திருச்சபையையும், தாயார் யூதரும் ஆவார். தனது பெற்றோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட லேர்னிங் டு டிரைவில் தனது குடும்பத்தைப் பற்றி விரிவாக எழுதினார்.

1972 இல் ராட்கிளிஃப் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலை பட்டமும், [2] கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எழுத்துப்பூர்வமாக நுண்கலையில் முதுகலை பட்டமும் பெற்றார். ஆர்வர்டில் இருந்த காலத்தில், ஜனநாயக சமூகத்திற்கான மாணவர்களுடன் பணிபுரிந்தார். 1969 ஆம் ஆண்டு மாணவர் வேலைநிறுத்தத்தில் ஜாரெட் இஸ்ரேலுடன் பங்கேற்றார்

தொழில் வாழ்க்கை

தொகு

பொலிட் தி நேஷன் இதழில் "விவாதத்திற்கு உட்பட்டது" என்ற இருமாத கட்டுரைக்காக மிகவும் பிரபலமானவர். த நியூயார்க் டைம்ஸ், மற்றும் லண்டன் ரிவியூ ஆஃப் புக்ஸ் போன்ற வெளியீடுகளிலும் இவரது எழுத்து இடம்பெற்றுள்ளது. தி நியூ யார்க்கர் மற்றும் 2006 ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் உட்பட பல தொகுப்புகள் மற்றும் பத்திரிகைகளில் இவரது கவிதைகள் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தேசிய வானொலியின் ஃப்ரெஷ் ஏர் அண்ட் ஆல் திங்ஸ் கன்சிடெர்ட், சார்லி ரோஸ், தி மெக்லாலின் குரூப், சிஎன்என், டேட்லைன் என்பிசி மற்றும் பிபிசி ஆகியவற்றில் தோன்றினார். [3]

இவரது பெரும்பாலான எழுத்துக்கள் சமகால பெண்ணியம் மற்றும் அடையாள அரசியலின் பிற வடிவங்களைப் பாதுகாப்பதில் உள்ளன. கருக்கலைப்பு, ஊடகங்கள், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, வறுமைமையின் அரசியல் (குறிப்பாக நலன்புரி சீர்திருத்தம் ) மற்றும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகள் இயக்கங்கள் ஆகியவை அடங்கும்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஜூன் 6, 1987 இல், இவர் நியூயார்க் டைம்ஸ் இதழின் கட்டுரை எழுதி வந்த ராண்டி கோஹன் என்பவரை மணந்தார். [4] பின்னர் இருவரும் விவாகரத்து செய்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஏப்ரல் 29, 2006 அன்று, பொலிட் அரசியல் கோட்பாட்டாளர் இசுடீவன் லூக்ஸ் என்பவரை மணந்தார். [5] இவர்கள் மன்ஹாட்டனில் வசிக்கிறார்கள்.

உசாத்துணை

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Pollitt, Katha (Vol. 122) - Introduction". www.enotes.com, Contemporary Literary Criticism. பார்க்கப்பட்ட நாள் 5 August 2011.
  2. "Radcliffe Awards to Honor Distinguished Women". Harvard Gazette (The President and Fellows of Harvard College). 1996-05-30. http://news.harvard.edu/gazette/1996/05.30/RadcliffeAwards.html. பார்த்த நாள்: 2008-07-07. 
  3. "Author Bios". The Nation.com. 22 March 2010. பார்க்கப்பட்ட நாள் 10 August 2011.
  4. "TV Writer Wed To Katha Pollitt". New York Times. 1987-06-07. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9B0DE4D7113EF934A35755C0A961948260. 
  5. "Katha Pollitt and Steven Lukes". New York Times. 2006-04-30. https://www.nytimes.com/2006/04/30/fashion/weddings/30poll.html?_r=1&oref=slogin. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதா_பொலிட்&oldid=3662811" இலிருந்து மீள்விக்கப்பட்டது