கத்திபாசு ஆறு

கத்திபாசு ஆறு (மலாய்: Sungai Katibas; ஆங்கிலம்: Katibas River); போர்னியோ, கிழக்கு மலேசியா, சரவாக், சோங் மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆறு ஆகும். ராஜாங் ஆற்றின் மிக முக்கியமான துணை ஆறுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.

கத்திபாசு ஆறு
Katibas River
சரவாக்
1912-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கத்திபாசு ஆற்றின் படம்
அமைவு
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுகாப்பிட் பிரிவு
மாவட்டம்சோங் மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம்காப்புவாசு மலைத்தொடர்
 ⁃ அமைவுமலேசியா;
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
1°38′17″N 110°29′59″E / 1.6380°N 110.4996°E / 1.6380; 110.4996
நீளம்120 km (75 mi)

தென்மேற்கு சரவாக்கில் வசிப்பவர்களுக்கு நீர் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. மேல் கப்புவாஸ் மலைத்தொடரில் (Upper Kapuas Range) உற்பத்தியாகி ராஜாங் ஆற்றில் கலக்கிறது.

பொது

தொகு

புரூக் வம்சாவழி ஆட்சிக்கு முந்தைய நூற்றுக் கணக்கான ஆண்டுகளில், சரவாக் மக்களின் பல்வேறு வாழ்க்கைச் செயல்பாடுகளுக்கு, கத்திபாசு ஆறு தாயகமாக விளங்கி உள்ளது.[1]

சோங் மாவட்டம், ராஜாங் ஆற்றின் துணை ஆறான கத்திபாசு ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. சோங் மாவட்டத்தின் தலைநகரமான சோங் நகரம்; கத்திபாசு ஆற்று வழியாக ராஜாங் ஆறு வரை செல்லும் ஆற்றுப் போக்குவரத்துக்கு ஒரு முக்கியமான ஆறாகத் திகழ்கின்றது.

காயான் மக்கள் குடியேற்றம்

தொகு

காயான் மக்கள் (Kayan People), இந்தக் கத்திபாசு ஆற்றின் வழியாகத்தான் சோங் மாவட்டத்தில் குடியேறினார்கள். காயான் மக்களே, சோங் பகுதியில் குடியேறிய முதல் இனக் குழுவாகும்.

அந்த நேரத்தில், காயான்கள் நாடோடி இன மக்கள். அதே நேரத்தில், இன்றைய இந்தோனேசியா கலிமந்தான் பகுதியில் இருந்து இபான் மக்கள் (Iban People) இடம்பெயர்ந்து, விவசாயம் செய்வதற்காக கத்திபாசு ஆற்றின் (Katibas River) கரைகளில் குடியேறினர்.[2]

இபான் மக்கள்

தொகு

இந்தக் கட்டத்தில், காயான் மக்களுக்கும்; இபான் மக்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டு ஒரு போராக வளர்ந்தது. அதில் இபான் மக்கள் வெற்றி பெற்றனர். தோல்வியை ஏற்றுக் கொண்ட காயான் மக்கள் பெலாகா மாவட்டத்திற்குள் (Belaga District) இடம் பெயர்ந்தனர்.

இபான் மக்கள் கத்திபாசு ஆற்றங் கரைகளிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டனர். கத்திபாசு ஆற்றங் கரைகளில் அதிகமான இபான், காயான் இன மக்களைக் காணலாம்.

கத்திபாசு கோட்டை

தொகு

1870-இல், புரூக் அரசாங்கம் நங்கா சாங் (Nanga Song) நகரில் ஒரு கோட்டையைக் கட்டியது. இந்தக் கத்திபாசு கோட்டை சோங் மாவட்டத்தின் முதல் நிர்வாக மையமாகவும் செயல்பட்டது. மற்றும் கத்திபாசு ஆற்றில் இபான் மக்களின் எழுச்சிகளைத் தடுக்கும் நோக்கத்துடன் அந்தக் கோட்டை கட்டப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Tan, Noel (1 April 2019). "The Katibas River has played a central role in the history of Sarawak. One of the most well-known events in the history of the state occurred on the banks of the Sarawak River – the arrival of James Brooke, which opened the door for the Brooke family's rule over Sarawak beginning 1841". SEAArch - Southeast Asian Archaeology. பார்க்கப்பட்ட நாள் 4 August 2022.
  2. "Sejarah Daerah Song (History of the Song District)". Song Internet Centre. Archived from the original on 6 July 2017. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்திபாசு_ஆறு&oldid=4106009" இலிருந்து மீள்விக்கப்பட்டது