கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள்

கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள் அல்லது கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் என்பன தன்னாட்சி அதிகாரமுடையவையும் திருத்தந்தையோடு முழு உறவு ஒன்றிப்பில் இருக்கும் தனித்திருச்சபைகளாகும்.[1] இலத்தீன் வழிபாட்டு முறைசபைகளோடு இவையும் ஒன்றாக முழு கத்தோலிக்க திருச்சபையாக கருதப்படுகின்றன. இவற்றின் வழிபாட்டு முறை பிற கீழைத்திருச்சபைகளோடு ஒத்திருக்கின்றன.

இந்தியாவில் உள்ள சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையினர்
கீழைத்திருச்சபை சீரோ மலங்கரா கத்தோலிக்க கர்தினால் ஒருவர் மேற்கு சிரியாக் முறையில் வழிபாடு நடத்துகின்றார்

மனித குடி பெயர்தலின் காரணமாக கிழக்கிலிருந்து இவ்வகைத்திருச்சபைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு ஆப்பிரிக்கா, இந்தியா, மேற்கு ஐரோப்பா, அமெரிக்காக்கள் மற்றும் ஓசியானியா ஆகிய இடங்களிலும் ஆட்சிப்பீடங்களைக் (Eparchy) கொண்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Zagano, Phyllis (Jan 2006). "What all Catholics should know about Eastern Catholic Churches". americancatholic.org. Archived from the original on 2011-05-17. பார்க்கப்பட்ட நாள் 2011-04-27.