கநும் அல்லது கநோம் (அசர்பைஜான்: Xanım, துருக்கியம்: Hanım, பாரசீக மொழி: خانم‎, உருது: خانم‎, வங்காள மொழி: খাঁনম, খানম) அரச அல்லது பிரபுக் குடும்பங்களில் பெண்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டமாகும். இது முதலில் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவில் தோன்றியதாகும். பின்னர் மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவில் பயன்படுத்தப்பட்டது. இது கான் என்பதன் பெண்பால் பட்டமாகும்.[1]

துருக்கிய மொழியில், இது “ஹனிம்” என உச்சரிக்கப்படுகிறது. சுல்தானின் மனைவிக்கு வழங்கப்படும் “ஹனிம்ஃபென்டி” எனும் பட்டம், கநும் (“ஹனிம்”) மற்றும் “எஃபென்டி” ஆகிய வார்த்தைகளின் கூட்டுச் சொல்லாகும்.

தெற்கு ஆசியாவில், குறிப்பாக பஞ்சாப், சிந்து, ஹைதராபாத், டெல்லி மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகிய இடங்களில் ‘’கநும்’’ உயர் சமூக நிலையில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு மரியாதைக்குரிய பெயராகப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Henning, W. B., 'A Farewell to the Khagan of the Aq-Aqataran',"Bulletin of the School of Oriental and African studies – University of London", Vol 14, No 3, p 501–522
"https://ta.wikipedia.org/w/index.php?title=கநும்&oldid=2430093" இலிருந்து மீள்விக்கப்பட்டது