கந்தமாதன பருவதம்

கந்தமாதன பருவதம் பாம்பன் தீவில் ராமேஸ்வரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ஒரு மணற்குன்று ஆகும்.

ராமர் பாதம்

தொகு

இத்தீவில் உள்ள தொலைதொடர்பு கோபுரம் தவிர்த்து இதுதான் உயரமான பகுதி என்பதால் தீவு முழுமையையும் இங்கிருந்து காண முடியும். இங்குள்ள கோயிலில் இருக்கும் சக்கர வடிவின் மீதிருக்கும் பாதத்தடங்கள் இராமருடையவை என்று நம்பப்படுகிறது. எனவே இவ்விடம் பொதுவாக ‘இராமர் பாதம்’ என அழைக்கப்படுகிறது[1]. மாசி சிவராத்திரி திருவிழாவின்போது ராமேஸ்வரம் கோயிலிலிருந்து ராமநாத சுவாமியும் பர்வதவர்த்தினி அம்மனும் இங்குள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளும் வழக்கம் உள்ளது[2].

திருச்செந்தூர் தொடர்பு

தொகு

திருச்செந்தூர் முருகன் கோயில் ‘சந்தனமலை’ என்னும் குன்றின் மீதே அமைந்திருப்பதாகவும் எனவே கந்தமாதன பர்வதம் என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டென்றும் சொல்லப்படுகிறது. [3].

இலக்கிய, சிற்பச்சான்றுகள்

தொகு

கந்தமாதன மலை மகாபாரதத்திலும், இராமாயணத்திலும், புத்த ஜாதகக் கதைகளிலும், பல்வேறு புராணக் கதைகளிலும் முனிவர்கள் தங்கி தவமியற்றும் இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது[4][5][6][7].. இந்த மலையின் பெயருக்கும் நாற்றத்துக்கும் தங்க நிறத்துக்கும் தொடர்புள்ளதாகத் தெரிகிறது[8][9]. கந்தமாதன மலை இடம்பெற்றுள்ள ஒரு புராணக்காட்சியின் புடைப்புச் சிற்பம் திருக்குறுங்குடியில் உள்ளது[10][11]. கந்தமாதன மலை தமிழிலக்கியத்தில் கம்ப ராமாயணம், திருநாவுக்கரசர் தேவாரம், கச்சியப்ப முனிவரின் தணிகைப் புராணம் உள்ளிட்ட பலவற்றில் இடம்பெற்றுள்ளது [12][13][14]. கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணத்தில் இம்மலை மேருமலைக்குத் தென்புறத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது[15].

சான்றுகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-01. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
  2. http://www.dinamani.com/edition_madurai/article839716.ece?service=print
  3. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
  4. http://mmsmartlady.blogspot.in/2014/08/blog-post_20.html
  5. http://mahabharatham.arasan.info/2014/04/Mahabharatha-Vanaparva-Section142.html
  6. http://temple.dinamalar.com/news_detail.php?id=10544
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-08. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-20. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
  10. http://amrithavarshini.proboards.com/thread/637/
  11. http://www.badriseshadri.in/2010/07/blog-post_04.html
  12. https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
  13. http://joomla1526.knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1623:2012-05-08-16-29-52&catid=265[தொடர்பிழந்த இணைப்பு]
  14. http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=107&pno=154
  15. http://www.tamilvu.org/library/l41e0/html/l41e0ind.htm

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தமாதன_பருவதம்&oldid=3594206" இலிருந்து மீள்விக்கப்பட்டது