இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்

(ராமேஸ்வரம் ராமநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் (Ramanathaswamy Temple) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டார். இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்
ஆள்கூறுகள்:9°17′17″N 79°19′02″E / 9.288106°N 79.317282°E / 9.288106; 79.317282
பெயர்
பெயர்:இராமநாதசாமி திருக்கோயில்
அமைவிடம்
அமைவு:இராமேசுவரம்
கோயில் தகவல்கள்
மூலவர்:இராமநாதசுவாமி: (சிவபெருமான்) - சீதையால் உருவாக்பப்பட்ட மணல் சிவலிங்கம்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:ஏறத்தாழ 2100 -2600 ஆண்டுகளுக்கு முன்
அமைத்தவர்:முற்கால பாண்டியர்களின் மூதாதையர்கள்

கோயில் அமைவிடம்

தொகு

மதுரையிலிருந்து கிழக்கே 161 கி. மீ., தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் ராமேஸ்வரம் எனுமிடத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு

தொகு

இராவணனிடமிருந்து சீதையை மீட்க, இராவணனிடம் போர் புரிந்து அவனை கொன்றார் ராமன். ராவணன் பிராமணன் ஆதலால் ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வரக்கூடாது என்பதற்காகவும் இராவணனைக் கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிசுடை செய்தார். எனவே ராமனே ஈசுவரனை வணங்கியதால் இக்கோயில் மூலவர் சிவபெருமானுக்கு இராம நாத சுவாமி என்றும் ராமேசுவரம் அதாவது இராம ஈசுவரம் என்றும் பெயர் பெற்றது. இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வாழ்வு வளம்பெருகும் என்பது இந்து தர்ம நம்பிக்கை.

காசி - இராமேசுவரம் யாத்திரை முறை

தொகு
 
அக்னி தீர்த்தம்

காசி, இராமேசுவரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விசுவநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிசேகம் செய்து, காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.

அம்மன் சன்னதி

தொகு

இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பர்வத வர்தனி அம்மன். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம், சேதுபீடம் ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.

சுவாமி சன்னதி

தொகு

பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராசர் காட்சி தருகிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோச நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரசுவதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீசுவரர், ஏகாதச ருத்ர லிங்க சன்னதிகள் அமைந்துள்ளது.

படிக இலிங்க பூசை

தொகு

கர்ப்பகிரகத்தில் உள்ள ஆதிசங்கரர் பிரதிசுடை செய்த படிக இலிங்கத்திற்கு நாள் தோறும் காலை 5 மணி முதல் ஆறு மணி வரை பாலாபிசேகம் செய்யப்படுகிறது.

பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம்

தொகு

கோயிலின் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தின் தற்போதைய 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம், 22½ அடி உயரம் கொண்டது.[1]

முக்கிய திருவிழாக்கள்

தொகு
  1. மகாசிவராத்திரி
  2. மார்கழி திருவாதிரை
  3. பங்குனி உத்திரம்
  4. திருக்கார்த்திகை
  5. ஆடி அமாவாசை
  6. தை அமாவாசை
  7. மகாளய அமாவாசை

கோயில் அமைப்பு

தொகு

தென்னிந்திய கோயில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது, கிழக்கு கோபுரத்தை 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் சேதுபதி மன்னரின் முதலமைச்சர் முத்திருளப்பபிள்ளையால் கட்டப்பட்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.[1]

திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தம்

தொகு
வ.எண் தீர்த்தங்கள் விபரம்வ.எண்தீர்த்தங்கள் விபரம்
1 மகாலட்சுமி தீர்த்தம் 12 கெந்தமாதன தீர்த்தம்
2சாவித்திரி தீர்த்தம் 13 பிரமஹத்தி விமோசன தீர்த்தம்
3காயத்திரி தீர்த்தம் 14 கங்கா தீர்த்தம்
4 சரஸ்வதி தீர்த்தம் 15 யமுனா தீர்த்தம்
5 சங்கு தீர்த்தம் 16 கயா தீர்த்தம்
6 சக்கர தீர்த்தம் 17 சர்வ தீர்த்தம்
7 சேது மாதவர் தீர்த்தம் 18 சிவ தீர்த்தம்
8 நள தீர்த்தம் 19 சாத்யாமமிர்த தீர்த்தம்
9 நீல தீர்த்தம் 20 சூரிய தீர்த்தம்
10 கவய தீர்த்தம் 21 சந்திர தீர்த்தம்
11 கவாட்ச தீர்த்தம் 22 கோடி தீர்த்தம்

திருக்குட நன்னீராட்டு விழா

தொகு

இராமேசுவரம் கோயிலின் முதல் திருக்குட நன்னீராட்டு விழா (கும்பாபிசேகம்) 1948இல் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது திருக்குட நன்னீராட்டு விழா 1975யிலும், மூன்றாவது திருக்குட நன்னீராட்டு விழா 2001யிலும் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பின் அடுத்த திருக்குட நன்னீராட்டு விழா நான்காவது திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களுக்கான கும்பாபிசேகம் 20.01.2016 அன்று நடைபெற்றது.[2]

விவேகானந்தரின் வருகை

தொகு

விவேகானந்தர் 27 சனவரி 1897இல் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து ராமநாத சுவாமியை வணங்கி ஆற்றிய சொற்பொழிவில், அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. எனவே உடல் மற்றும் மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார் என்றார்.[1]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு