கந்தேய் ஜாத்ரா
கந்தேய் ஜாத்ரா அல்லது பொம்மை கண்காட்சி என்பது இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள பெர்ஹாம்பூரில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாவாகும். [1] இந்த திருவிழாவானது கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் பழமையானது மேலும் ஒடிசா நகரத்தின் பழமையான ஜெகநாதர் கோயிலுடன் தொடர்புடையது ஆகும். மூன்று நாட்கள் வரை நடைபெறும் இவ்விழாவில் களிமண், மரம் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்படும்.
வரைவு
தொகுஇந்த விழா ஒவ்வொரு ஆண்டும் இந்து நாட்காட்டி மாதமான ஆஷாட பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. பட்டு நகரம் என்று அழைக்கப்படும் பெர்ஹாம்பூரில் ஒரு வார ரத யாத்திரைக்குப் பிறகு இந்த விழா நடைபெறுகிறது. சுமார் மூன்று நூற்றாண்டுகள் பழமையான இந்த பாரம்பரிய விழாவின் பொம்மை கண்காட்சி, கஸ்பா தெருவில் அமைந்துள்ள இந்நகரத்தின் (பெர்ஹாம்பூர்) பழமையான ஜெகநாதர் கோவிலின் சடங்குகளோடு, கலாச்சார முறையில் இணைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியத்தின் படி, இந்த கோவிலில் உள்ள ஜெகநாதரின் சிலையின் பீடம் ஒவ்வொரு இரவில் வெவ்வேறு புராண பாத்திரங்களின் மண் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின் நிகழும் நல்ல விஷயம் என்னவென்றால், களிமண், மாட்டு சாணம், மரம், தேங்காய் மற்றும் தாள் ஊறல் ஆகிய கைவினை மூல பொருட்களில் இருந்து பொம்மைகளை உருவாக்கும் பாரம்பரிய பொம்மை தயாரிப்பாளர்களின் படைப்புக்களை மக்களிடம் விற்பனை செய்ய இது ஊக்குவிக்கிறது. [2]
வரலாறு
தொகுஉள்ளூர் கதைகளின்படி, பல நூற்றாண்டுகளுக்கு முன், படா ஜகன்னாத் கோவிலின் பூசாரி ஸ்ரீபச்சா பாண்டா (ଶରୀବଛ ପଣ୍ଡା) மஹுரி ராஜ்ஜியத்தின் ராஜாவை (தற்போது உள்ளூர் மக்களால் மஹுரி கலுவா என்று அழைக்கப்படுகிறார்) இத்திருவிழாவிற்கு அனுமதி கோரினார், அதன்படி அவரும் இந்த திருவிழாவை நடத்த அனுமதித்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பெர்ஹாம்பூர் கஸ்பா தெருவில் திருவிழா கொண்டாடப்படுகிறது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Traditional Doll Festival in Berhampur City". orissabarta.com. Orissa Barta. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
- ↑ "Toy Fair". The Hindu. 14 July 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/shopping-for-toys-on-a-full-moon-night/article6208126.ece. பார்த்த நாள்: 23 December 2015.
- ↑ "The wait is over for traditional toy makers in Berhampur! Kandhei Jatra begins". Daily News & Analysis. 31 July 2015.