கனகசுந்தரசுவாமி வீரவாகு

கனகசுந்தரசுவாமி வீரவாகு (Kanagasundaraswami Veerabahu, 30 சூன் 1948 - 17 பெப்ரவரி 2015) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார்.

கனகசுந்தரசுவாமி வீரவாகு
வட மாகாண சபை, முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்
பதவியில்
11 அக்டோபர் 2013 – 17 பெப்ரவரி 2015
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்கந்தையா சிவனேசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-06-30)30 சூன் 1948
10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டம்
இறப்பு17 பெப்ரவரி 2015(2015-02-17) (அகவை 66)
யாழ்ப்பாணம், இலங்கை
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
துணைவர்சண்முகப்பிரியா
பெற்றோர்வீரவாகு, கற்பகம்
வேலைகிராம அலுவலர்
இனம்இலங்கைத் தமிழர்

புதுக்குடியிருப்பு கிராம அலுவலராகப் பணியாற்றிய கனகசுந்தரசுவாமி வீரவாகு 2013 மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 8,702 வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்குத் தெரிவானார்.[1][2] இவர் வடமாகாண சபை உறுப்பினராக வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் 2013 அக்டோபர் 11 அன்று பதவியேற்றார்.[3][4] இதன் பின்னர் அமைக்கப்பட்ட வட மாகாண சபையில் இவர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசன மற்றும் சுற்றாடல் அமைச்சில் உதவி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5]

மறைவு

தொகு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கனகசுந்தரசுவாமி வவுனியாயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.[6] பின்னர் இவர் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு 2015 பெப்ரவரி 17 இல் காலமானார்.[6][7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 1 மே 2015. 
  2. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லிமிரர். 26 செப்டம்பர் 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  3. "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக். 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736. 
  4. "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11 அக். 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html. 
  5. "Division of Ministries of the Northern Provincial Council & Subjects for Councillors". தமிழ்நெட். 11 October 2013. http://www.tamilnet.com/img/publish/2013/10/Division_of_Ministries.pdf. 
  6. 6.0 6.1 "TNA Mullaitivu NPC member V. Kanagasunthara Swami passed away". Tamil CNN. 18 பெப்ரவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150222163308/http://www.tamilcnn.ca/tna-mullaitivu-npc-member-v-kanagasunthara-swami-passed-away.html. 
  7. "Funeral of NPC member Veerabahu Kanakasuntharaswami: Thousands of people participated". Tamil CNN. 20 February 2015 இம் மூலத்தில் இருந்து 9 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150509221720/http://www.tamilcnn.ca/funeral-of-npc-member-veerabahu-kanakasuntharaswami-thousands-of-people-participated.html. 
  8. Rubatheesan, S. (22 பெப். 2015). "Been there, done that, say apathetic Mullaitivu voters". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/150222/news/been-there-done-that-say-apathetic-mullaitivu-voters-137083.html.