கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி

கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி (K.C.A Gnanagiri Nadar, ஏப்ரல் 16, 1906 - , சிவகாசி) ஒரு தமிழ் ஆய்வாளர். தமிழ் மொழியின் தொன்மை பற்றி பன்மொழி ஆய்வு செய்தவர். தமிழ், இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவரின் ஆய்வுகள் தமிழ் எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி என நிரூபிக்க முயல்கின்றன. இந்த ஆய்வுகள் நூல்களாக வெளிவந்துள்ளன.

வாழ்க்கை தொகு

சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியலில் பட்டப்படிப்பு பயின்றார். ஆரம்பகாலத்தில் (1920களில்) முதன்மை அதிகாரியாகவும், பின்பு நிர்வாக இயக்குநராகவும் ஆயுட்காப்பீட்டுக் கழக கம்பெனியில் தேசியமயமாக்கப்படும் வரை பணி புரிந்தார். அதன் பிறகு ஆயுள் காப்பீட்டு கவுன்சில் நிர்வாக உறுப்பினராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். இவர் கம்பெனி சட்டம், கம்பெனி தணிக்கை சட்டம் போன்றவற்றை வரைமுறைப் படுத்தியவர்.

தமிழாராய்ச்சி தொகு

இவரது Latin Words of Tamil Origin என்ற நூல் இலத்தீன் மொழி தமிழில் இருந்து பெற்றுக்கொண்டதாக கருதப்படும் சொற்கள் பற்றிது. Greek Words of Tamil Origin என்ற நூல் கிரேக்க மொழி தமிழில் இருந்து பெற்றுக்கொண்டதாக கருதப்படும் சொற்கள் பற்றியது. இவ்விரு நூல்களையும் அகராதி போன்று அச்சிட்டு வெளியிட்டார்.

இதே போன்று ஆங்கிலம், ஜெர்மன் போன்ற மொழிகளில் உள்ள தமிழ் சொற்களாக கருதப்படுபவை பற்றியும் ஆய்வுகள் வெளியிட்டுள்ளார். இதற்கு அன்றைய பிரித்தானியப் பிரதமர் தாட்சரின் பாராட்டைப் பெற்றார்.

தமிழ் தொன்மையான மொழி பலரும் கூறுகின்ற நிலையில் ஆராய்ச்சி மூலம் பிறமொழியினர் ஏற்றுக்கொள்ளுமளவுக்கு நிருபிக்க இவர் முனைந்தார்.

இவரின் ஆராய்ச்சியை அறிந்து சென்னை தொலைக்காட்சி நிலையம் 1984 இல் நமது விருந்தினர் பகுதியில் திரு. இளங்கோவன் இ.ஆ.ப அவர்களுடனான நேர்காணலில் இவர் ஆய்வை மக்களுக்கு வெளிப்படுத்தியது[1]. இவருடைய ஆய்வு தமிழ் மொழி வடமொழி சாராத தனித்துவமான மொழி என்று சான்றளிக்கிறது என்று முனைவர் ஆல்பர்ட் பி பிராங்க்ளின், அமெரிக்காவின் இந்தியக்கல்வியல் நிறுவனம் (American Institute of Indian Studies) பாராட்டியுள்ளார்[2]

.

இவரது நூல்கள் தொகு

  • Latin words of Tamil origin: An etymological dictionary (1981)
  • Tamil, its contribution to the European languages: An etymological survey (1975)
  • Greek words of Tamil origin: An etymological lexicon (1982)
  • A statement in Tamilo-European linguistics: In the matter of Greek and Latin words of Tamil origin (1982)
  • English words containing Tamil roots: An etymological dictionary with a vocabulary of only 1,000 words, mostly of science and technology, preliminary to ... of 5,000 or even 10,000 English words (1985)[3]

மேற்கோள்கள் தொகு

  1. Doordarshan Kendra Chennai
  2. கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி; ENGLISH EDITION (1982). GREEK WORDS OF TAMIL ORIGIN-AN ETYMOLOGICAL LEXICON. MADURAI: K.C.A.GNANAGIRI NADAR. பக். I-XVI-1-127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:B0006EEYZM. http://www.isbns.net/author/K_C_A_Gnana_Giri_Nadar.  The above indicated statment which was mentioned in the above said title book under the heading of About The Author.
  3. ISBNS.NET