கனடாவில் இசுலாம்

2011ம் ஆண்டின் கனடாவின் தேசிய கணக்கெடுப்பின் படி1,053,945 முஸ்லிம்கள் அதாவது நாட்டின் மக்கட்தொகையில் 3.2% பேர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர்[1] இஸ்லாம் நாட்டின் இரண்டாவது பெரிய மதமாகும் தொராண்டோவில் மட்டும் 7.7 சதவீதத்தினர் முஸ்லிம்களாவர் அதை தொடர்ந்து மொண்ட்ரியால் நகரில் 6 சதம் இஸ்லாமியர்களாவர்.[2] .

ஒட்டாவா பெரிய பள்ளி

மக்கட்தொகை மற்றும் வாழ்க்கை முறை

தொகு

பெரும்பாலான கனேடிய முஸ்லிம்கள் ஒன்டாரியோ மற்றும் கியூபெக் நகரங்களில் செறிந்து காணப்படுகின்றனர்.2011ம் ஆண்டின் வீடமைப்பு கணக்கீட்டின்படி 424,925 முஸ்லிம்கள் ஒன்டாரியோ பெருநகர பகுதியில் மட்டும் வசிக்கின்றனர்.இவர்களில் பெரும்பகுதியினர் இந்தியா, பாக்கிஸ்தான்,இரான், மற்றும் எகிப்திய/அரேபிய வம்சாவழியினர்.மோன்ட்ரியல் பகுதி முஸ்லிம்களில் மேற்கு/தெற்கு ஐரோப்பியா,கரீபியன் தீவுகள்,மத்திய கிழக்கு மற்றும் இந்திய துணைக்கண்டத்தை சேர்ந்த்த வம்சாவழியினராவர். தலைநகரான ஒட்டாவா பகுதியில் 5.5% முஸ்லிம்களில் பெரும்பாலும் லெபனான் , தெற்காசியா ,மற்றும் சோமாலியா வம்சாவழியினர். [1] பரணிடப்பட்டது 2019-09-24 at the வந்தவழி இயந்திரம்

கனடிய முஸ்லிம்களாக அடையாளப்படுத்தும் குடிபெயர்ந்தவர்கள் தங்களின் உயர் கல்வி கல்வி, வேலைவாய்ப்பு,பாதுகாப்பு ,மத மற்றும் அரசியல் சுதந்திரத்திற்காகவும்,பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட உள்நட்டு போரினாலும் பலர் குடியேறிக்கொண்டுள்ளனர். கனடா உலகின் தஞ்ச கோரிக்கையை ஏற்று குடியமர்த்தும் நாடுகளில் முதன்மையானதாக உள்ளது.இவர்களில் சோமாலியா, போசுனியா,அல்பேனியா,யேமன்,சிரியா,இராக் ,மற்றும் வங்க தேசம் போன்ற நாடுகளில் இருந்து தஞ்சமடைந்த்துள்ளனர் [3][சான்று தேவை]

கருவுருதல் விகிதத்தில் மற்ற கனேடியர்களை விட 0.8 சதவீதம் அதிகமாகும்( சராசரி 1.6) முஸ்லிம் விகிதம் 2.4 ஆகும் [4] நியூ பிரன்சுவிக்

மாகாணம் முஸ்லிம்1991 % 1991 முஸ்லிம் 2001 % 2001 Muslims 2011 % 2011
  ஒன்டாரியோ 145,560 1.4% 352,530 3.1% 581,950 4.6%
  கியூபெக் 44,930 0.6% 108,620 1.5% 243,430 3.1%
  அல்பெர்டா 31,000 1.2% 49,045 1.7% 113,445 3.2%
  பிரிட்டீஷ்

கொலம்பியா

24,925 0.7% 56,220 1.4% 79,310 1.8%
  மனிபோடா 3,525 0.3% 5,095 0.5% 12,405 1.0%
  சக்க்சுவான் 1,185 0.1% 2,230 0.2% 10,040 1.0%
  நோவா

ஸ்காட்டிய்யா

1,435 0.1% 3,550 0.4% 8,505 0.9%
  நியூ ப்ர்வ்ன்சுவிக் 250 0.0% 1,275 0.2% 2,640 0.3%
  நியூபௌன்ட்லாந்து 305 0.0% 630 0.1% 1,200 0.2%
  இளவரசர் எட்வர்டு தீவு 60 0.0% 195 0.1% 660 0.5%
  வடமேற்கு பகுதிகள் 55 0.1% 180 0.5% 275 0.7%
  நுனாவுட் 25 0.1% 50 0.2%
  யுக்கான் 35 0.1% 60 0.1% 40 0.1%
  கனடா 253,265 0.9% 579,640 2.0% 1,053,945 3.2%

வரலாறு

தொகு
 
டொரொன்டோ தாவா மையம்

கனடா நிறுவப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கணக்கெடுப்பின்படி 13 ஐரோப்பிய முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர்.1938ல் எட்மான்டன் பகுதியில் முதல் பள்ளிவாசல் நிறுவப்பட்டது அப்போதைய முஸ்லிம்களின் எண்ணிக்கை 700.

முதல் இஸ்லாமிய பாடசாலை 1983ல் ஒன்டாரியோ பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு உலமா , ஹாபிழ் போன்ற பட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடாவில்_இசுலாம்&oldid=3365484" இலிருந்து மீள்விக்கப்பட்டது