கனாவுஜி மொழி
கனாவுஜி மொழி இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பேசப்பட்டுவரும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது பொதுவாக மேற்கு ஹிந்தியின் கிளை மொழியாகவும் கருதப்படுவதுண்டு. இம் மொழியிலும், திர்ஹாரி, மாறுநிலைக் கனாவுஜி முதலிய கிளைமொழிகளும் காணப்படுகின்றன.
கனாவுஜி மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | bjj |
இம் மொழியினர் தங்கள் மொழியைப் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்த போதிலும், தற்காலத்தில் இவர்கள் மத்தியில் ஹிந்தி மொழியின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. அழிந்து போகக்கூடிய வாய்ப்புள்ள இம் மொழியைக் காப்பாற்றுவதிலும் இவர்களில் ஒரு பகுதியினர் அக்கறை காட்டி வருகின்றனர்.
கனாவுஜி என்னும் பெயரை ஆய்வாளர்களே இம்மொழிக்கு வழங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இம்மொழி பேசுபவர்கள் தங்கள் மொழியை ஹிந்தி என்றே குறிப்பிடுகின்றனர்.