கனிச்சிறகன்
கனிச்சிறகன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. aconthea
|
இருசொற் பெயரீடு | |
Euthalia aconthea (Hewitson, 1874)[1] | |
வேறு பெயர்கள் | |
Euthalia garuda |
கனிச்சிறகன் (Euthalia aconthea) வரியன் குடும்பத்தைச்சேர்ந்த நடுத்தரமான அளவிலான பட்டாம்பூச்சி. இது இந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் இருக்கிறது. பறக்கையில் இறக்கைகளை இறுக்கமாக அசைக்கும். சிலவேளை அப்படியே இறக்கையை அடிக்காமல் மிதந்து செல்லும்.
தோற்றம்
தொகுஆண் பூச்சிகள் பழுப்பாகவும் கரும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். முன்னிறகின் அடியில் இரு குறுக்குவெட்டுக் கோடுகள் கருப்பு நிறத்தில் இருக்கும். நடுவில் ஒரு கருப்பு வளையமும், இன்னொன்று வெளியிலும் இருக்கும். அதனையடுத்து ஒரு தட்டைவடிவ வளையமும் அவற்றினருகே மாலை போல 5 வெள்ளைப்புள்ளிகளும் காணப்படும்.[2]
பெண்பூச்சி இதையொத்து இருந்தாலும் சற்று பச்சைமிகுந்தும் அடர்த்தியில்லாத பழுப்பு நிறத்திலும் இருக்கும். பென்பூச்சிகளின் இறக்கைகளின் கீழ்ப்புறத்தில் வெண்ணிற அடையாளக்குறிகல் மங்கலாகத்தெரியும்.
நெஞ்சுப்பகுதி திடமாகவும் விரிந்தும் இருக்கும். நீர்மமுறிஞ்சும் குழாய் வெளிர்பச்சையில் இருக்கும். இறக்கைகளின் விரிநிலையில் 68-70 மிமீ வரை இருக்கும்.
நடத்தை
தொகுவேகமாகவும் தரையை ஒட்டியும் பறக்கும். இறக்கையை அதிகமாக அடிக்காமல் மிதந்து செல்லும். ஆண்டு முழுவதும் காணப்படும். சிறகைவிரித்து வெயில்காயும். கம்பளிப்புழுக்கள் மாந்தோப்புகளில் காணப்படும். மலர்த்தேனைக் காட்டிலும் அழுகிய பழஙச்சாறை விரும்புவதால் இப்பெயர்பெற்றது.
வாழிடம்
தொகுதென்னிந்தியா முழுக்கவும், பாலை, இமயமலையின் உயரப்பகுதிகள் நீங்கலாக பிற பகுதிகளிலும், தொடர்ந்து மியன்மர், சுமாத்திரா வரை காணப்படுகின்றன.
வாழ்க்கைப்பருவங்கள்
தொகுகூட்டுப்புழு பச்சையாகவும் நாற்கோணவடிவாகவும் இருக்கும். பெரும்பாலும் மாவிலைகளில் இருக்கும்.
-
முட்டை
-
கம்பளிப்புழு
-
கம்பளிப்புழு
-
கம்பளிப்புழு
-
கூட்டுப்புழு
-
பச்சை உறிஞ்சான்
-
வண்ணத்துப்பூச்சி
-
பெண்பூச்சி
கம்பளிப்புழு உணவு
தொகுகம்பளிப்புழுக்கள் முந்திரி, மா, பிராய மரங்களில் (Streblus asper) வாழும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுகுறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- முனைவர் பானுமதி (2015). வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு. சென்னை: கிரியா. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789382394136.