கன்னிப் பேச்சு

சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ தேர்ந்தெடுக்கபட்ட புதிய உறுப்பினரின் முதல் பேச்சு

கன்னிப் பேச்சு (maiden speech) அல்லது முதல் பேச்சு என்பது சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட உறுப்பினர் வழங்கும் முதல் உரையாகும்.

மரபு

தொகு

கன்னிப் பேச்சுகளைச் சுற்றியுள்ள மரபுகள் நாட்டுக்கு நாடு மாறுபடும். பல வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பு அரசாங்கங்களில், கன்னிப் பேச்சுகள் ஒப்பீட்டளவில் சர்ச்சைக்குரியதாக இருக்கக்கூடாது என்ற மரபு உள்ளது. பெரும்பாலும் தற்போதைய தலைப்பில் ஒரு பாரபட்சமான கருத்தைக் காட்டிலும் அரசியல்வாதியின் நம்பிக்கைகள் மற்றும் பின்னணி பற்றிய பொதுவான அறிக்கையைக் கொண்டிருக்கும்.[1]

இருப்பினும், இந்த மரபு எப்போதும் பின்பற்றப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, 1996-ல் ஆத்திரேலிய பிரதிநிதிகள் சபையில் பாலின் ஹான்சன்,[2] மற்றும் 1947-ல் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் ரிச்சர்ட் நிக்சன் ஆகியோரின் கன்னி உரைகள், பாரம்பரியத்தை உடைத்தன.[3] 1959ஆம் ஆண்டு பொதுச் சபையில் உரையாற்றிய மார்கரெட் தாட்சர் தனது முதல் உரையில், மசோதா ஒன்றினை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தினார். இச்சட்டம் பொது அமைப்புகள் (கூட்டங்களுக்கு அனுமதி) சட்டம் 1960 என்பதாகும்.

நெதர்லாந்து போன்ற சில நாடுகளில், கன்னிப் பேச்சுகள் குறுக்கீடு அல்லது குறுக்கீட்டிற்கு உட்படுத்தப்படக்கூடாது என்ற மரபினைப் பின்பற்றி வழங்கப்படுகிறது. மேலும் அடுத்தடுத்த பேச்சாளர்களால் தாக்கப்படவோ அல்லது நிராகரிக்கப்படவோ கூடாது என்று ஒரு வலுவான மரபும் பின்பற்றப்படுகிறது. இங்கிலாந்து பொதுச் சபைகளில் உள்ள மற்றொரு மரபு என்னவென்றால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தான் வகிக்கும் பதவியில் முன்பிருந்தவர்களுக்குக் கன்னி உரையில் அஞ்சலி செலுத்துவார்.[1]

சில நாடுகள், குறிப்பாக ஆத்திரேலியா, அரசியல்வாதிகளின் முதல் உரையை 'கன்னி' என்று முறைப்படி விவரிக்காது, அதை 'முதல்' உரை என்று மட்டுமே குறிப்பிடுகிறது. ஆத்திரேலிய நாடாளுமன்ற இணையதளம் மற்றும் ஹன்சார்ட் பதிவுகள் இனி 'கன்னி' என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை; சொற்பொழிவு மற்றும் பேச்சுவழக்கு பயன்பாட்டில் இந்த வார்த்தை பொதுவானது.

ஐக்கிய இராச்சிய பொதுச் சபை

தொகு

பொதுத் தேர்தலுக்குப் பிறகு முதல் கன்னி உரைகள்:

தேர்தல் தேதி பெயர் பார்ட்டி ஹன்சார்ட்
2010 25 மே 2010 ரிச்சர்ட் ஹாரிங்டன் கன்சர்வேட்டிங் கட்சி [4]
2015 27 மே 2015 பிரெண்டன் ஓ'ஹாரா இசுக்கொட்டிய தேசியக் கட்சி [5]
2017 21 சூன் 2017 விக்கி ஃபோர்டு கன்சர்வேட்டிங் கட்சி [6]
2019 19 திசம்பர் 2019 கோலம் ஈஸ்ட்வுட் எஸ். டி. எல். பி [7]

தமிழக சட்டமன்றத்தில்

தொகு

தமிழ்நாடு சட்டமன்றத்திலும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தாம் விருப்பத்தின் அடிப்படையில் இடையூறின்றி பேசும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகிறது. 2021 ஆகத்து மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் சட்டசபையில் உறுப்பினர்களின் முதல் பேச்சை ‘கன்னிப் பேச்சு’ என்று கூறுவதை முதல் பேச்சு என மாற்ற வேண்டும் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தார். கன்னி என்றச் சொல் சமசுகிருத சொல் என்பது உறுப்பினரின் கருத்தாகும். இதனை ஏற்றுக்கொள்வதாகச் சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்தார்.[8] மேலும் முதல் பேச்சில் தங்களுக்கு வாய்ப்புத்தந்த தமது தலைவரை அதிகமாகப் புகழ்ந்து பேசுவதில் உறுப்பினர்கள் அதிக நேரத்தினை செலவிடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Maiden speeches: guidance for new Members". Commons briefing note (UK House of Commons). 2017 இம் மூலத்தில் இருந்து 2018-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180304123729/https://www.parliament.uk/documents/commons/executive/commons-briefing-note-2-maiden-speech.pdf. 
  2. "Pauline Hanson's 1996 maiden speech to parliament: Full transcript" (in en). The Sydney Morning Herald. 2016-09-14. https://www.smh.com.au/politics/federal/pauline-hansons-1996-maiden-speech-to-parliament-full-transcript-20160915-grgjv3.html. 
  3. "Congressman Richard Nixon's Maiden Speech To The House Of Representatives.". http://watergate.info/1947/02/18/nixon-maiden-speech-to-house-of-representatives.html. 
  4. வார்ப்புரு:Cite hansard
  5. வார்ப்புரு:Cite hansard
  6. வார்ப்புரு:Cite hansard
  7. "Debate on the Address - Hansard". hansard.parliament.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-01-21.
  8. "'கன்னிப்பேச்சு' என்பதை மாற்றவேண்டும்: : வானதி சீனிவாசன் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிப்_பேச்சு&oldid=3634299" இலிருந்து மீள்விக்கப்பட்டது