கன்னேசு ஆல்ப்வேன்

கன்னேசு ஓலாப் கோசுத்தா ஆல்ப்வேன் (Hannes Olof Gösta Alfvén) (சுவீடிய மொழி: [alˈveːn]; 30 மே 1908 – 2 ஏப்பிரல் 1995) ஒரு சுவீடிய மின்பொறியாளரும் மின்ம இயற்பியலாளரும் அண்டவியலாளரும் 1970 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவரும் ஆவார். இவருக்கு இயற்பியலில் நோபல் பரிசு காந்தப் பாய்ம இயங்கியல் ஆய்வுக்காக வழங்கப்பட்ட்து. இவர் இன்று ஆல்ப்வேன் அலைகள் என வழங்கும் காந்தப் பாய்ம அலைகளை முதலில் விளக்கினார். இவர் முதலில் மின்பொறியியலில் பயின்றாலும் பிறகு இவர் மின்ம இயற்பியல் மின்பொறியியல் ஆகிய புலங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் மின்ம இயற்பியலில் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். அவற்றில் புவிமுனைக் கனல்கள், வான் ஆலன் பட்டைகள், புவிக்காந்தப் புலத்தில் நிகழும் புவிக்காந்தப் புயல்கள், புவிக் காந்தக்கோளம், பால்வெளியின் மின்ம ஊடக இயங்கியல் ஆகியவற்றின் நடத்தைகளுக்கான கோட்பாடுகளை விளக்கல் அடங்கும்.

கன்னேசு ஆல்ப்வேன்
Hannes Alfvén
பிறப்புகன்னேசு ஓலாப் கோசுத்தா ஆல்ப்வேன்
(1908-05-30)30 மே 1908
நார்கோப்பிங், சுவீடன்
இறப்பு2 ஏப்ரல் 1995(1995-04-02) (அகவை 86)
தியூர்ழ்சோல்ம், சுவீடன்
துறைமின்ம இயற்பியல்
பணியிடங்கள்
  • உப்சாலா பல்கலைக்கழகம்
  • அரசு தொழில்நுட்ப நிறுவனம்
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாந்தியாகோ
  • மேரிலாந்து பல்கலைக்கழகம், கல்லூரி பூங்கா
  • தென்கலிபோர்னியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்உப்சாலா பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்மன்னி சீகுபாகின்
கார்ல் வில்கெல்ம் ஒசீன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
  • கார்ல்-குன்னி பைதம்மர்
அறியப்படுவது
  • காந்தப் பாய்ம இயங்கியல்
  • மின்ம அண்டவியல்
  • ஆல்ப்வேன் அலை
விருதுகள்
  • பியோர்கென்சுக்கா பரிசு (1946)
  • இயற்பியல் நோபல் பரிசு (1970)
  • உலோமனசோவ் பொற்பதக்கம் (1971)
  • டிராக் பதக்கம் (1979)
  • அரசு கழக ஆய்வுறுப்பினர் (1980)[1]
  • வில்லியம் போவி பதக்கம் (1988)

கல்வி

தொகு

ஆல்ப்வேன் தன் முனைவர் பட்ட்த்தை 1934 இல் உப்சாலா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[2] இவரது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு "மின்காந்த அலைகளின் உயர் அலைவெண் ஆய்வுகள்" என்பதாகும்.

முந்தைய வாழ்க்கை

தொகு

பிந்தைய வாழ்க்கை

தொகு

ஆராய்ச்சி

தொகு

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் கெர்சுட்டீனை மணந்து 67 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தார்(1910–1992). இவர்கள் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இவர்களில் ஒருவர் ஆண்குழந்தை; மற்ர நால்வரும் பெண்குழந்தைகள். இவரது மகன் மருத்துவரானார்; ஒரு பெண் எழுத்தாளரானார்; மற்றொரு பெண் வழக்கறிஞரானார். இசை வல்லுனர் இயூகோ ஆல்ப்வேம் இவரது மாமா ஆவார்.

விருதுகளும் தகைமைகளும்

தொகு

மின்ம இயற்பியலில் அரிய பங்களிப்புகளை செய்வோருக்கு ஆண்டுதோறும் கன்னேசு ஆல்ப்வேன் பரிசு ஐரோப்பிய இயற்பியல் கழகத்தால் இவரது பெயரால் வழங்கப்படுகிறது. சிறுகோள் 1778 ஆல்ப்வேன் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

விருதுகள்

தொகு
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1967)
  • இயற்பியலுக்கான நோபல் பரிசு (1970), காந்தப் பாய்ம இயங்கியல் ஆய்வுக்காக
  • பிராங்ளின் நிறுவனத்தின் பிராங்ளின் பதக்கம் (1971)
  • உலோமனசோவ் பொற்பதக்கம், உருசிய அறிவியல் கல்விக்கழகம் (1971)
  • Elected a அரசு வானியல் கழக அயல்நாட்டு உறுப்பினர் (1980) [1]
  • வில்லியம் போவி பதக்கம், அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றியம் (1988) வால்வெள்ளி, சூரியக் குடும்ப மின்ம இயற்பியல் ஆய்வுக்காக
  • சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்
  • சுவீடிய அரசு பொறியியல்சார் அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்
  • மின், மின்னணுப் பொறியாளர் நிறுவன வாழ்நாள் ஆய்வுறுப்பினர்[3]
  • ஐரோப்பிய இயற்பியல் கழக உறுப்பினர்[4]
  • அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழக அயல்நாட்டுத் தகைமை உறுப்பினர் (1962)[5]
  • யூகோசுலாவிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்
  • அறிவியல், உலக நிகழ்ச்சிகளிற்கான புகுவாழ்சு கருத்தரங்கப் பங்களிப்பாளர் [6]
  • பன்னாட்டு அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்[7]
  • இந்திய தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்

ஆல்ப்வேன் ஐக்கிய அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகம், சோவியத் அறிவியல் கல்விக்கழகம் ஆகிய இரண்டிலும் அயல்நாட்டு உறுப்பினர்களாக உள்ள ஒஎருசில அறிவியலாளர்களில் ஒருவராவார்.

தேர்வுசெய்த நூல்தொகை

தொகு

இவரது வெளியீடுகளின் முழுமையான பட்டியலுக்கு காண்க, [8]

நூல்கள்
கட்டுரைகள்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Pease, R. S.; Lindqvist, S. (1998). "Hannes Olof Gosta Alfven. 30 May 1908-2 April 1995". Biographical Memoirs of Fellows of the Royal Society 44: 3–19. doi:10.1098/rsbm.1998.0001. 
  2. "Alfvén, Hannes Olof Gosta". Who Was Who in America, 1993-1996, vol. 11. New Providence, N.J.: Marquis Who's Who. 1996. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8379-0225-8.
  3. Fälthammer, C. G. (1997). "Plasma physics from laboratory to cosmos-the life and achievements of Hannes Alfven". IEEE Transactions on Plasma Science 25 (3): 409–414. doi:10.1109/27.597253. Bibcode: 1997ITPS...25..409F. 
  4. European Physical Society Honors Hannes Alfvén
  5. "Book of Members, 1780-2010: Chapter A" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 14 April 2011.
  6. Background Notes on Presidents of Pugwash
  7. LIST OF NOBEL LAUREATES WHO ARE ICSD/IAS MEMBERS
  8. Full list of publications

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னேசு_ஆல்ப்வேன்&oldid=3059529" இலிருந்து மீள்விக்கப்பட்டது