கன்வர் பால் சிங் கில்

இந்திய காவல்துறை அதிகாரி

கன்வர் பால் சிங் கில் (Kanwar Pal Singh Gill) (1934/35 – 26 மே 2017) என்பவர் ஒரு இந்திய காவல்துறை அதிகாரியாவார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட பஞ்சாப் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதாகக் கருதப்பட்டவர். இவர் பஞ்சாப் மாநில காவல்துறை தலைமை இயக்குநராக இரண்டு முறை பணியாற்றினார். பலர் அவரை ஒரு கதாநாயகனாக கருதுகையில், "பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில்" நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு அவரும், அவரது கட்டளைகளின் கீழ் செயல்பட்ட படைகளுமே பொறுப்பு என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. 1995 இல் இந்தியக் காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

கன்வர் பால் சிங் கில்
2005 இல் கில்
1934 அல்லது 1935[1] – 26 மே 2017(2017-05-26) (அகவை 82) [2]
பிறந்தயிடம்பிரித்தானிய இந்தியா, பஞ்சாப், லூதியானா
உயிரிழந்தயிடம்இந்தியா, புதுதில்லி
Allegianceஇந்தியக் காவல் பணி
பணிபுரிந்த பிரிவுஇந்தியா
பணியிலிருந்த ஆண்டுகள்1958 – 1995[3]
தரம்காவல்துறையின் தலைமை ஆய்வாளர் (1980கள்)
காவல்துறையின் தலைமை இயக்குனர் (1988–90; 1991–95)
விருதுகள்பத்மசிறீ (1989)[4]
பிறபணிகள்நிர்வாகி; founded the Institute for Conflict Management

கில் எழுத்தாளர், ஆசிரியர், பேச்சாளர், பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசகர், மோதல் மேலாண்மை நிறுவன நிறுவனர், இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பின் தலைவர் (IHF) ஆகிய பணிகளைச் செய்தவராவார்.

கில் 1988 ஆம் ஆண்டில் ஒரு விருந்தில் ஒரு பெண் அதிகாரியிடம் நிகழ்த்திய பாலியல் சீண்டலுக்கு 1996 இல் தண்டனை விதிக்கப்பட்டார். அவருக்கு எதிரான லாபிகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

2008 ல் இந்திய ஆக்கி கூட்டமைப்பு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் இடை நீக்கம் செய்யப்பட்டது.

1989 ஆம் ஆண்டில் அவருக்கு குடிமைப் பணித் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

பணிகள்

தொகு

1958–1984

தொகு

கில் 1958 இல் இந்திய காவல் பணியில் நுழைந்தார், வடகிழக்கு இந்தியாவின் அசாம், மேகாலயாவில் தனது பணியைத் செய்தார்.[5][6] 1980 களின் முற்பகுதியில் அசாமில் காவல்துறையின் தலைமை ஆய்வாளராக பணியாற்றினார். அங்கு மாணவர் இயக்கத்தின் கிளர்ச்சியை ஒடுக்குவதில் முனைப்புக் காட்டினார். குதிரை மீது அமர்ந்தபடி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் கடுமையான அதிகாரியாகவே அறியப்பட்டார். கர்கேஷ்வர் தாலுக்தார் எனும் மாணவர் தலைவர் மரணத்துக்குக் காரணமானவர் என்று அவர் மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் 28 ஆண்டுகளாக வசித்து வந்த கில், 1984 இல் தனது சொந்த மாநிலமான பஞ்சாபுக்குத் திரும்பினார்.[1]

1984–1995

தொகு

அவர் "சூப்பர்காப்" என்று அழைக்கப்பட்டார்.[7] பின்னர் இவர் பஞ்சாப் காவல்துறைக்கு மாற்றப்பட்டார், அப்போது காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பை வகித்தார்[5][7] [8][9] இப்பதவியில் 1988 முதல் 1990 வரை இருந்தார், பின்னர் மீண்டும் 1991 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் இருந்து அவர் ஓய்வு பெறும்வரை நீடித்தார். பஞ்சாபில் காலிஸதான் இயக்கத்தில் சீக்கிய போராளிகள் தீவிரமாக செயல்பட்ட காலகட்டத்தில், பஞ்சாபில் மனித உரிமை மீறல்கள் நிகழ்வுகள் நடக்கத்துவங்கின. 1983 முதல் 1994 வரையான காலகட்டத்தில், காலிஸ்தான் இயக்கம் உருவாகி சுதந்திர சீக்கிய நாட்டை உருவாக்கும் நோக்கோடு ஆயுத குழுக்கள் போராடி வந்தன. இக்கால கட்டத்தில் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தன. இதில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் படுகொலையில் ஈடுபட்டனர் மேலும் பலரை பணயக் கைதிகளாக பிடித்துக் கொண்டனர். காவல்துறை "ஒடுக்குமுறையுடன்", சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்ட, நூற்றுக்கணக்கான சீக்கிய இளைஞர்களைக் கொன்றதாகவும், கொலை செய்ததாகவும் பன்னாட்டு மன்னிப்பு அவை தெரிவித்தது.[10] அதேபோல 1980 களில் சீக்கியப் பிரிவினைவாதிகள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்த இந்து சிறுபான்மையினர்மீது தாக்குதலில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் அரசப் படைகளால் திட்டமிட்டு எதிர்தாக்குதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் பொலிஸ் காவலில் பலர் "காணாமல்போயினர்" மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணையின்றி அடைத்துவைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.[11] 1991 க்குப் பிந்தைய காலகட்டத்தில், பஞ்சாப் காவல்துறை இயக்குநராக கில் இரண்டாம் முறை பதவிக்கு வந்தார். இக்காலகட்டத்தில் மிகத்தீவிரமாக வன்முறை அதிகரித்தது.

1988 மே மாதம் பொற்கோயிலில் மறைந்திருக்கும் போராளிகளை வெளியேற்றுவதற்கு ஆபரேஷன் பிளாக் தண்டர் என்னும் நடவடிக்கைக்கு கில் கட்டளையிட்டார். புளூஸ்டார் நடவடிக்கையை ஒப்பிடும்போது, பொற்கோயிலுக்கு இந்த நடவடிக்கையில் சிறிய சேதம் ஏற்பட்டது.[12] இது ஒரு வெற்றிகரமான நடவடிக்கை என்று கூறப்பட்டது, இதில் சுமார் 67 சீக்கியர்கள் சரணடைந்தனர் மற்றும் 43 பேர் கொல்லப்பட்டனர். ப்ளூ ஸ்டார் நடவடிக்கை காலத்தில் இந்திய இராணுவத்தால் செய்யப்பட்ட தவறுகளை அவர் மீண்டும் செய்ய விரும்பவில்லை என்று கில் தெரிவித்தார்.[13] முந்தைய நடவடிக்கைகளுக்கு முரணாக, குறைந்தபட்ச சக்தியுடன் பொதுமக்கள் பார்க்கும்வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.[14][15] இந்த நடவடிக்கையை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் கில் ஒத்துழைப்பு கொடுத்தார்.[16]

பஞ்சாபில் வன்முறை உச்சத்தில் இருந்தத 1991 காலகட்டத்தில், 5000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1992 இல், இந்திய அரசாங்கம் "தீவிரவாதத்திலிருந்து பஞ்சாப்பை மீளப் பெற விரும்பியது", இதனால் கில் பஞ்சாப் காவல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு காவல்துறையும், இராணுவமும் தங்கள் அடக்குமுறையைத் துவக்கின. 1993 இல் இறப்பு எண்ணிக்கை 500 க்கும் குறைவாக இருந்தது. 1993 ஆம் ஆண்டில் தி நியூயார்க் டைம்ஸ் இதழில், பஞ்சாப் மக்கள் முன்பு "கலகக்காரர்கள் அல்லது கும்பல்களைக்" கண்டு அஞ்சினர், ஆனால் தற்போது அதற்குப் பதிலாக இராணுவம் மற்றும் போலீசைக் கண்டு அஞ்சுகின்றனர் என்றது.[17] "கைது செய்யப்படாமலே, போர்க்குணமிக்க சீக்கிய தலைவர்களும் அதன் உறுப்பினர்களும்" அகற்றப்பட வேண்டும் என்ற இலக்கை கில் கொண்டிருந்ததாக பாட்ரிசியா கோஸ்மேன் தெரிவிக்கிறார். கே. பி.எஸ். கில் காலர் துறையினருக்கு அவர்களின் செயல்பாடுகளுக்காக வெகுமதிகளை வழங்கும் முறையை விரிவுபடுத்தினார் - இது போலீசாரை கொடூரமான கொலைகளை செய்யவும் பலரை காணாமல் போகச்செய்யவும் ஊக்குவிக்கும் ஒரு நடைமுறையாக ஆனது.[18] தீவிரவாதிகளைக் கொல்லும் காவலர்களுக்கு பரிசுப் பணம் வழங்கப்பட்டது. "இந்திய ஒன்றிய அரசாங்கம் பஞ்சாப் போராளிக் குழுக்களை ஒடுக்க தேவைப்படும் நிதிக்காக சிறப்பு நிதி ஒன்றை உருவாக்கியது. இந்த நிதிகொண்டு தீவிரவாதிகள் மற்றும் போராளிகள் அவர்களின் ஆதரவானவர்கள் போன்றவர்களைப் பற்றிய தகவல்களை பெறும் வலைபின்னலுக்கும், அவர்களைப் பிடித்துக் கொல்லும் காலர்களுக்கு பரிசு விருது போன்றவை அளிக்கப் பயன்படுத்தப்பட்டது".[19] வெகுமதி சுமார் 50,000 ரூபாய் ($ 1,670) வரை வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்றைய இந்தியா டுடே பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் "பண வெகுமதிகளை வழங்குவது என்பது போலீசாரை கூலிப்படையினராக மாற்றுகிறது" எனக் கூறியது. போராளிகளைக் கொல்வதற்கும் (இந்த நோக்கத்திற்கான வருடாந்திர செலவினம்: ரூ 1.13 கோடி [338,000]) தவிர, துறையினால் பட்டியலிடப்படாத போராளிகளைக் கொல்வதற்காக "அறிவிக்கப்படாத வெகுமதிகள்" அளிக்கப்பட்டன.[20]

ஜஸ்வந்த் சிங் கில்ரா என்பவர் ஒரு மனித உரிமை ஆர்வலர் ஆவார், இவர் 1995 செப்டெம்பர் 6 இல் பஞ்சாப் பொலிஸால் காவலில் வைக்கப்பட்டார். 1995 செப்டம்பர் 11 அன்று உச்சநீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டு, கில்லுக்கு உத்தரவிடக் கோரப்பட்டது, ஆனால் போலீசார் அவரை கைது செய்ததாக கூறுவதை அதிகாரிகள் மறுத்தனர். (சிறப்பு போலீஸ் அதிகாரி குல்டிப் சிங் 2005 ம் ஆண்டு சாட்சியமளித்தபோது, கில்ரா கொல்லப்பட்ட சில நாட்களுக்கு முன்பு, கில் அக்டோபர் 1995 இல் கலராவிற்கு விஜயம் செய்ததாக குறிப்பிட்டார்.)

கில் தலைமையிலான காவலர்களின் கைது போன்ற கெடுபிடிகளால் போராளிகள், பஞ்சாப்புக்கு அப்பாலுள்ள இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். "1993 இல் பஞ்சாப் காவல்துறையின்" பல அறிக்கைகளில் "இந்தியாவின் மற்ற பகுதிகளில் சீக்கிய போராளிகளின் நடவடிக்கைத் தொடர்கின்றன என்று உறுதிப்படுத்தின. 17 மே அன்று, கல்கத்தாவில் போலிஸ் குழு ஒன்று லக்ஷ்மி சிங் என்ற தீவிரவாதியை ஒரு அடுக்ககத்தில் தேடிவந்தது. அண்டை வீட்டாரின் கூற்றுப்படி, பஞ்சாப் காவல்துறையினர் அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்து, சிங்கையும், அவரது மனைவியையும் படுக்கையறையில் சுட்டுக் கொன்றனர். இதற்கு பஞ்சாப் அரசாங்கத்துக்கு மேற்கு வங்க அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், காவல் அத்துமீறலுக்கு எதிரான எந்த ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. "[21]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 HAZARIKA, SANJOY (23 May 1988). "Reporter's Notebook; At Sikh Temple, an Uncertain Song Returns". The New York Times. https://www.nytimes.com/1988/05/23/world/reporter-s-notebook-at-sikh-temple-an-uncertain-song-returns.html. பார்த்த நாள்: 2009-07-09. 
  2. http://www.tribuneindia.com/news/punjab/former-punjab-dgp-kps-gill-passes-away-at-82/413078.html
  3. "'Supercop' K P S Gill passes away at 82". Rediff.com. 26 May 2017. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-11-15. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  5. 5.0 5.1 Singh, Jyotsna (8 May 2002). "Profile: KPS Gill". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/1975997.stm. பார்த்த நாள்: 2009-07-04. 
  6. "Profiles". Institute for Conflict Management. n.d. பார்க்கப்பட்ட நாள் 2009-06-15. {{cite web}}: |first= missing |last= (help)
  7. 7.0 7.1 "'Supercop' Gill to take on Chhattisgarh Maoists". The Tribune (சண்டிகர்). 6 April 2006. http://www.tribuneindia.com/2006/20060406/nation.htm#18. பார்த்த நாள்: 2008-03-13. 
  8. Jyotsna Singh (8 May 2002). "Profile: KPS Gill". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1975997.stm. பார்த்த நாள்: 2008-12-19. "Mr Gill is known for his success in rooting out militancy from the Indian state of Punjab..." 
  9. Ajay Bharadwaj (26 October 2008). "Super-cop Gill floats new party". Daily News & Analysis. பார்க்கப்பட்ட நாள் 2008-12-19. Former supercop KPS Gill, who is credited with decimating militancy in Punjab...
  10. "India: A vital opportunity to end impunity in Punjab". Amnesty International. 1998–1999. Archived from the original on 2009-06-25. பார்க்கப்பட்ட நாள் 2009-07-04.
  11. Human Rights Watch. "Punjab in Crisis". Human Rights Watch. Archived from the original on 11 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. INDIAN COMMANDOS CLOSE IN ON SIKHS பரணிடப்பட்டது 22 மே 2016 at the வந்தவழி இயந்திரம், த நியூயார்க் டைம்ஸ், 1988-05-18
  13. Sikhs Surrender to Troops at Temple பரணிடப்பட்டது 4 சூன் 2016 at the வந்தவழி இயந்திரம், த நியூயார்க் டைம்ஸ், 1988-05-19
  14. Terrorism in context By Martha Crenshaw. Books.google.com. 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-271-01015-1. பார்க்கப்பட்ட நாள் 2009-09-28.
  15. Black Thunder’s silver lining பரணிடப்பட்டது 2011-06-06 at Archive.today, ஹிந்துஸ்தான் டைம்ஸ், 2008-05-13
  16. வெ.சந்திரமோகன் (29 மே 2017). "கே.பி.எஸ்.கில்: சர்ச்சை சிங்கம்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2017.
  17. Gargan, Edward A. (26 October 1993). "Though Sikh Rebellion Is Quelled, India's Punjab State Still Seethes". The New York Times. https://www.nytimes.com/1993/10/26/world/though-sikh-rebellion-is-quelled-india-s-punjab-state-still-seethes.html?pagewanted=1. பார்த்த நாள்: 2009-07-05. 
  18. Gossman, Patricia (2002). Death Squads in Global Perspective. Palgrave Macmillan. pp. 264, 269.
  19. Gossman, Patricia (2002). Death Squads in Global Perspective. Palgrave Macmillan. p. 269.
  20. Sandhu, Kanwar (15 October 1992). "Official Excesses". India Today. 
  21. United States Department of State. "Country Reports on Human Rights Practices for 1993". United States Department of State. Archived from the original on 11 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 28 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்வர்_பால்_சிங்_கில்&oldid=3792244" இலிருந்து மீள்விக்கப்பட்டது