கபிதா சின்கா

இந்திய எழுத்தாளர்

கபிதா சின்ஹா (Kabita Sinha) (பி. கொல்கத்தா, 1931-1999) ஒரு வங்காள கவிஞர், நாவலாசிரியர், பெண்ணியவாதி மற்றும் வானொலி இயக்குநர் ஆவார். இவர் தனது நவீனத்துவ நிலைப்பாட்டிற்காக நன்கறியப்படுகிறார். வங்காளப் பெண்களுக்கான பாரம்பரிய வீட்டுப் பங்களிப்பு நிலைப்பாட்டை நிராகரித்தார். இது மல்லிகா சென்குப்தா மற்றும் தஸ்லிமா நஸ்ரின் உள்ளிட்ட பிற கவிஞர்களின் படைப்புகளில் பின்னர் எதிரொலித்தது.

கபிதா சின்கா
பிறப்பு1931
கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா
இறப்பு1998
போஸ்டன், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சுல்தானா சவுத்ரி
கல்விமாநிலக் கல்லூரி & அசுதோஷ் கல்லூரி
பணிகவிஞர், நாவலாசிரியர், வானொலி இயக்குநர்
அறியப்படுவதுபெண்ணிய இலக்கியம், இணக்கமற்ற இயக்கங்கள்
வாழ்க்கைத்
துணை
பிமல் ராய் சவுத்ரி

வாழ்க்கை

தொகு

கபிதா சின்ஹா 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 16 இல் சைலேந்திர சின்ஹா மற்றும் அன்னபூர்ணா சின்ஹா ஆகியோருக்கு கொல்கத்தாவில் பிறந்தார். இவர் குழந்தையாக இருந்த போதே எழுத ஆரம்பித்தார். 1951 ஆம் ஆண்டில், கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் தாவரவியல் படிக்கும் போது, இவர் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக எழுத்தாளரும் மற்றும் பத்திரிக்கை ஆசிரியருமான பிமல் ராய் சவுத்ரியை மணந்தார். இவரது புரட்சிகரமான மனப்பான்மையின் காரணமாக இவர் 1950 களில் எல்லோருக்கும் இணக்கமற்ற இயக்கங்களில் ஈடுபட்டார். நேருவிய அரசியல் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த சமயத்தில் பெண் அதிருப்தியாளராக உரையாற்றுவதில் இவர் முக்கிய சக்தியாக இருந்தார்.

இந்த செயல்பாடுகளின் காரணமாக, இவர் தனது இளங்கலைப் பட்டத்தை முடிக்கவில்லை - பின்னர் பல ஆண்டுகள் கழிந்த நிலையில் அசுதோஷ் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். இவர் மேற்கு வங்க அரசாங்கத்தில் தொகுப்பாளராக சேருவதற்கு முன்பு சில வருடங்கள் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். 1965 ஆம் ஆண்டில், இவர் அனைத்திந்திய வானொலியில் சேர்ந்தார், ஒரு கட்டத்தில் பீகாரின் தர்பங்காவில் நிலைய இயக்குநராக இருந்தார். 1966 ஆம் ஆண்டில், இவர் தனது கணவருடன் டைனிக் கபிதா என்ற கவிதை இதழைத் தொடங்கினார். கபிதா வங்கதேச விடுதலைப் போரின் ஆதரவாளராக இருந்தார். இவர் போர் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை வானொலியில் விவரிப்பார்.

1981 ஆம் ஆண்டில், அயோவா சர்வதேச எழுத்தாளர் பட்டறைக்கு அழைக்கப்பட்டார் .

1980 களில் இவர் அகில இந்திய வானொலியில் இளைஞர்களை உள்ளடக்கிய பல நிகழ்ச்சிகளைத் தொடங்கினார்.

இவர் அக்டோபர் 17, 1998 அன்று அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள தனது இளைய மகள் பரமேஸ்வரி ராய் சவுத்ரியின் இல்லத்தில் காலமானார்.

இலக்கிய வாழ்க்கை

தொகு

கபிதா சின்ஹா வங்க இலக்கியத்தின் முதல் பெண்ணியக் கவிஞராக அங்கீகரிக்கப்பட்டார்.[1] முதன்மையாக இவரது கவிதைக்காக அறியப்பட்டாலும், இவர் முதலில் வங்க இலக்கியத்தில் ஒரு நாவலாசிரியராக நுழைந்தார். இவரது முதல் நாவலான சார்ஜோன் ராகி ஜுபாதி (நான்கு கோபமான இளம் பெண்கள்) 1956 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏக்தி கரப் மேயர் கோல்போ (ஒரு கெட்ட பெண்ணின் கதை, 1958), மற்றும் நாயிகா பிரதிநாயிகா (கதாநாயகி, வில்லி, 1960) ஆகிய நாவல்கள் வெளியாயின.

இதற்கிடையில், இவர் பல்வேறு பத்திரிகைகளில் கவிதை எழுதியுள்ளார். ஆனால், இவரது முதல் கவிதைத் தொகுதி, சஹாஜ் சுந்தரி (ஈஸி பியூட்டி), 1965 ஆம் ஆண்டில் தான் வெளியிடப்பட்டது. 1976 ஆம் ஆண்டின் தொகுப்பான கபிதா பரமேஸ்வர் (கவிதை தெய்வம்) தொகுப்பானது குறிப்பாக நன்கு அறியப்பட்டது.

இவரது பல கவிதைகள் "அஜிபான் பதோர் ப்ரோதிமா" (கல் தெய்வம் என்றென்றும்), "ஈஸ்வர்கே ஈவ்" (ஈவ் கடவுளிடம் பேசுகிறது),[2] அல்லது "ஓபோமனர் ஜோன்யோ ஃபயரி ஆஷி" போன்ற கவிதைகளில் பெண்களின் நிலையைப் பற்றிப் பேசப்படுகிறது.

மொத்தத்தில், இவர் கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்களை வெளியிட்டார், அவற்றில் சில சுல்தானா சவுத்ரி என்ற புனைப்பெயரில் வெளியிடப்பட்டது. இவரது கவிதைகள் பரந்த அளவிலான கவிதைத் தொகுப்புகளில் இடம் பெற்றதோடு பரவலாக மொழிபெயர்க்கவும் பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. SARKAR, SIULI (2016-06-17). GENDER DISPARITY IN INDIA UNHEARD WHIMPERS (in அரபிக்). PHI Learning Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120352513.
  2. Translation பரணிடப்பட்டது 2020-07-26 at the வந்தவழி இயந்திரம் by Chitra Banerjee Divakaruni
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிதா_சின்கா&oldid=4161329" இலிருந்து மீள்விக்கப்பட்டது