கபிராஜ்
கபிராஜ் (வங்காளத்தில்: কবিরাজ; அசாமில்: কবিৰাজ, ஒடியாவில்: କବିରାଜ; நேபாளியில்: कविराज ) என்பது கிழக்கு இந்திய துணைக்கண்டத்தில்உள்ளவர்களிடம் காணப்படும் ஒரு தொழில்சார் பெயராகும். பண்டைய நாட்களில் கிழக்கு இந்தியாவில் பாரம்பரியமாக ஆயுர்வேதத்தை பயிற்சி செய்யும் இனக்குழுவானது, பொதுவாக கபி அல்லது கோபி என்று அழைக்கப்பட்டனர்.
பல்வேறு மூலிகைகள், தாவரங்களின் குணங்கள், விலங்குகளினால் ஏற்படும் நோய்கள், அவற்றை குணப்படுத்துதல் போன்றவற்றில் திறமை மிகுந்த இவர்கள் அரசர்கள் மற்றும் அரச குடும்பங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே அரசவைகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டனர். எனவே அவர்களுக்கு கபிராஜ் / கோபிராஜ் (ராஜா கபி - ராஜாக்களின் வைத்தியர்) என்ற பட்டம் வழங்கப்பட்டது. அத்தகைய நபர்களின் சந்ததியினர் "கபிராஜ்" என்பதை குடும்பப்பெயராகப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த குடும்பப்பெயர் கொண்ட மக்கள் பெரும்பாலும் வங்காளதேசம் மற்றும் இந்திய மாநிலங்களான மேற்கு வங்கம், பீகார், அசாம் மற்றும் ஒரிசா, [1] [2] துணைக்கண்டத்தின் ஒரே கலாச்சாரப் பகுதியில் உள்ளவர்களிடமும் பொதுவான மொழியியல் மூலங்களைப் பகிர்ந்துகொள்பவர்களிடமும் காணப்படுகிறது.இந்த பெயரைக் கொண்டவர்கள் பெரும்பாலும் இந்திய துணைக்கண்டத்திலே வாழ்ந்து வருகிறார்கள்'
மேலும் பார்க்கவும்
தொகு- கவிராஜ், ஒரே மாதிரியான தலைப்பு ஆனால் சொற்பிறப்பியல் வித்தியாசமானது
- வைத்தியா